ஒரு தலைப்பட்ச காதலால் மாணவியை சுட்டுத் தள்ளிய இளைஞன்

98 0

உத்தரப் பிரதேசம் சகரன்பூர் பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஜூலியை அதே இடத்தில் வசிக்கின்ற திபு என்ற இளைஞன் ஒருதலைப் பட்சமாகக் காதலித்து வந்துள்ளார்.

மாணவி பாடசாலை சென்று வீடு செல்லும்போது மாணவியை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்த போது தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தொடர்ந்து 4 முறை சுட்டுள்ளார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்த பெண்ணை எவரும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவில்லை.மாறாக சுற்றி நின்று செல்போனில் படம் பிடிப்பவர்களும், பெண்ணிடம் மாறி மாறி கதை கேட்பவர்களுமாகவே நின்றிருந்தனர்.

சுய நினைவுடன் இருந்த பெண்ணை நினைவிழந்த பின்னரே காவல்த்துறையினர் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.துப்பாக்கியால் சுட்ட இளைஞனை பொலீசார் தேடி வருகின்றனர்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மாணவியை கேள்வி மேல் கேள்வி கேட்டு சுய நிவைவில்லாமல் ஆக்கும் கானொளியை நீங்களே பாருங்கள் மக்களே என்ன ஒரு சமூகம்.

Related Post

ரணிலோடு இணைந்துகொள்ளவுள்ள மகிந்தவின் நெருங்கிய சகா?

Posted by - December 21, 2018 0
ஐக்கிய தேசிய முன்னணி அரசில் இணைந்துகொள்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளதாக அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதற்காக ஆளுங்கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுகள்…

302 அதிபர்களுக்கு தேசிய பாடசாலைகளில் நியமனம்

Posted by - October 16, 2018 0
தேசிய பாடசாலைகள் சிலவற்றில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு அதிபர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நாட்டின் 302 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு…

நிருவாகம் தெரியாத அரசாங்கம் – மகிந்த சாடல்

Posted by - October 8, 2018 0
இந்த அரசாங்கத்துக்கு ரூபாவை நிருவகிக்கவும் முடியாதுள்ளது, நாட்டை நிருவகிக்கவும் தெரியாதுள்ளது, கொழும்பு குப்பைகளை நிருவகிக்கவும் இயலாத ஒரு நிலையில் காணப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

ரூபாவின் பெறுமதி 26 சதத்தினால் பலமடைந்துள்ளது

Posted by - September 26, 2018 0
இலங்கை ரூபாய் ஒன்றின் பெறுமதி டொலரின் விலையுடன் ஒப்பிடும் போது நேற்று (25) சொற்ப அளவு பலமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின்…

ஜனாதிபதியின் உத்தரவுகளை மட்டுமே கேட்பேன்! – பொலிஸ்மா அதிபர் அதிரடி

Posted by - November 8, 2018 0
ஜனாதிபதியினால் வழங்கப்படும் உறுதியான ஆலோசனை மற்றும் கட்டளைக்கமைய மாத்திரமே, பொலிஸ் திணைக்களம் செயற்படும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை…