ஜனாதிபதிக்கு விளங்கும் பாஷையில் கூறுவதே அடுத்த கட்ட நடவடிக்கை- ஐ.தே.க.

146 0

ஜனாதிபதிக்கு விளங்கும் பாஷையில் கூறுவதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்துமபண்டார ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு செவிசாய்க்காது போனால், நீதிமன்றம் வெளியிடும் தீர்மானத்துக்கும் கட்டுப்படாது போனால் அடுத்து விளங்கும் பாஷையில் கூறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளோம்.

உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்மானம் வரும் வரையில் எதிர்பார்த்துள்ளோம். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக போராட்டம் முன்னெடுத்த உலக நாடுகள் அனைத்திலும் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். அவ்வாறான ஒரு நடவடிக்கையையே நாம் பயன்படுத்தவுள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

நிதானமாக சிந்தித்து முடிவெடுப்போம் ஊடகவியலாளர்களிடம் சுமந்திரன்!

Posted by - October 31, 2018 0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் அவசரப்படாமல் நிதானத்துடன் சிந்தித்து எமது முடிவை எடுப்போம். மற்றவர்கள் அவசரப்படுகின்றார்கள் என்பதற்காக நாம் அவசரப்படவேண்டிய தேவை…

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க பிரேரணை நிறைவேற்றம்

Posted by - October 28, 2018 0
அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற பிரேரணை ஒன்றினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நிறைவேற்றியுள்ளது. ஜனாதிபதி…

மகிந்ததான் பிரதமர்! வர்த்தமானி வெளியீடு!

Posted by - October 27, 2018 0
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மகிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்துள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்…

பிக்குகள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

Posted by - November 20, 2018 0
ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு அனுமதி பெறாத நிலையில், நேற்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் கூடிய பொதுபல சேனா அமைப்பின் பிக்குகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் தலையீட்டினால் ஜனாதிபதியைச்…

சிவில் உடையில் வருகைதந்து தமிழ்மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள்

Posted by - December 4, 2018 0
சிவில் உடையில் வருகைதந்து தமிழ்மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்வதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் நேற்று காலை தம்பனைசோலையில் நடைபெற்ற முன்பள்ளி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.…