உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்!

192 0

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர். தனது பேஸ்புக் பக்கம் மூலம் 4 கோடிக்கும் அதிகமான விருப்பங்களை  குவித்திருக்கும் அவர், தனது டுவிட்டர் தளத்தில் 4.3 கோடி பேர் பின்தொடர்பாளர்களையும் கொண்டிருக்கின்றார்.

இதைப்போல இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிரதமர் மோடி தீவிரமாக இயங்கி வருகின்றார். இந்த பக்கத்தில் அவரை 1.48 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு அடுத்தபடியாக 1.22 கோடிபேர் பின்தொடர்பாளர்களை பெற்றிருக்கும் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ 2ஆவது இடத்தையும், 1 கோடிபேர் பின்தொடர்பாளர்களை பெற்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 3ஆவது இடத்தையும் பெற்று உள்ளனர்.

லேலும், இதற்கு முதல்  இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோரை சந்தித்த படத்தை பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த படம் அதிக விருப்பங்களை குவித்ததுடன், உலக தலைவர் ஒருவர் பதிவிட்டு அதிக விருப்பங்களை பெற்ற புகைப்படம் என்ற சாதனையையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

குடிநீர் திட்டம் கிண்ணியாவில் ஆரம்பம்

Posted by - November 19, 2018 0
கிண்ணியா பைசல் நகர் நபவி பள்ளி வாயல் பின் வீதிக்கான பிரதான குடி நீர் குழாய் இணைப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டது. குறித்த குழாய் நீர் பதிப்பதற்கான அங்குரார்ப்பண…

முன்னாள் புலிகளை மஹிந்த – மைத்திரி அரசு விடுவிக்கும் – நாமல் உறுதி

Posted by - November 3, 2018 0
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து மஹிந்த – மைத்திரி தலைமைமயிலான புதிய அரசாங்கம் விடுதலை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ…

வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

Posted by - October 4, 2018 0
வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 4,000 ரூபா மற்றும் 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை தொடர்ந்தும் சில மாதங்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,…

கூட்டமைப்பின் ஆதரவைக் கோரும் ஹெகலிய

Posted by - November 4, 2018 0
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் ஆத­ரவு மகிந்த ராஜ­பக்­ச­வுக்­குத் தேவை என்று கூறி­ யுள்ள அர­சின் பேச்­சா­ளர் கெஹ­லிய, எதிர்வ­ரும் 16ஆம் திகதி வரை­யில் நாடா­ளு­மன்­றம் கூட்­டப்­ப­டு­…

கொழும்பு செல்ல ஆயத்தமாகிய நபருக்கு நேர்ந்தது என்ன

Posted by - October 12, 2018 0
ஹட்டன் புகையிரத நிலையத்தில் நேற்று இரவு சடலமாக ஒருவர் மீட்கபட்டுள்ளார். குறித்த நபர் பாபுல் என்ற போதை பொருளை உட்கொண்டமையினாலேயே உயிரியிழந்துள்ளதாக டிக்கோயா கிளங்கன் ஆதாரவைத்தியசாலையின் விஷேட…