யேமன் முக்கிய சமாதான பேச்சுவார்த்தை ஸ்வீடனில் ஆரம்பம்!

231 0

யேமனில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வருகின்ற உள்ளக போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலான சமாதானப் பேச்சுவார்த்தை, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஆரம்பமாகியுள்ளது.

இதுவொரு முக்கியமான திருப்புமுனை என்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதுவர் மார்ட்டின் கிரிஃபித்திஸ், இந்த பேச்சுவார்த்தையின் ஊடாக, கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தாவதுடன், ஆயிரக்கணக்கான குடும்பங்களை மீண்டும் இணைய செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக் காலமாக உலகில் மிக மோசமான மனிதநேய நெருக்கடி உருவாகுவதற்கு யேமன் போர் முக்கிய காரணமாகியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மில்லியன் கணக்கானோர் பசி, பட்டினியால் துன்புற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இந்த அமர்வில் ஆயிரகணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ள செங்கடலில் உள்ள ஹுடைடா துறைமுக நகரில் ஏற்படும் முழுமையான போரை தடுக்கும் முக்கிய நோக்கம் உள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யேமனில் ஏற்படும் எதிர்கால அரசியல் தீர்வுக்கு பேச்சுவார்த்தை திட்டத்தை ஐக்கிய நாடுகள் அவை கொண்டுவரும் என்றும் நம்பப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளிக்கும் முக்கிய தருணத்தை ஏற்படுத்திக் கொள்வோம் என்று ஸ்டாக்ஹோமில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய ஐநா தூதுவர் கிரிஃபித்திஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னர், ஹுடேடாவில் இருந்து கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கி, கட்டுப்பாட்டை அரசிடம் வழங்க வேண்டும் என்று டுவிட்டர் பதிவிட்டு யேமன் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, இந்த பேச்சுவார்த்தைகள் சானாவிலுள்ள விமானநிலையத்தை எல்லா பயணியர் விமான போக்குவரத்துக்கும் திறக்க வேண்டும், இல்லாவிட்டால், இந்த விமான நிலையத்திற்கு வருகின்ற ஐக்கிய நாடுகளின் விமானங்களை நிறுத்தப்போவதாக ஹூதி கிளர்ச்சியாளர்களின் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

போர் காரணமாக இந்த விமான நிலையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. ஹூதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சானாவையும், மக்கள் நெருக்கமாக வாழும் இடங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட அரசு நாட்டின் தெற்கில் அமைந்துள்ள ஏடன் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

Related Post

58 பெங்குவின்களை கடித்துக் கொன்ற நாய்கள்?

Posted by - October 17, 2018 0
தெற்கு ஆஸ்திரேலியாவில் 58 பெங்குவின்கள் திடீரென மாண்டு கிடந்தன. அவற்றை நாய் கடித்துக் குதறியிருக்கலாம் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். டாஸ்மேனிய கடற்கரையில் மாண்டு கிடந்த பெங்குவின்கள்…

இந்திய அமெரிக்க பெண்ணுக்கு அதிபர் விருது!

Posted by - October 22, 2018 0
மனித கடத்தலை தடுப்பதற்காக சிறப்பாக செயல்பட்ட இந்திய அமெரிக்க பெண்ணுக்கு அதிபர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. ஹூஸ்டன் மாகாண மேயர் சில்வெஸ்டர் டர்னருக்கு, மனித கடத்தல்…

குடிநீரின் விலையிலும் மாற்றம்

Posted by - October 1, 2018 0
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலையை அதிகரிப்பது தொடர்பிலான அதிவிஷேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய 350 – 499…

மகனை கொடூரமாக கத்தியால் வெட்டிவிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை! யாழில் சம்பவம்

Posted by - October 26, 2018 0
யாழ்ப்பாணத்தில் மகனை கொடூரமாக கத்தியால் வெட்டிவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி தேவரையாளி பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே குடும்பத்தகராறு…

ஐ.தே.முன்னணி சார்பில் தெரிவுக் குழுவுக்கு ஐந்து பேர்

Posted by - November 23, 2018 0
பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளாக ஐந்து பேர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டாளி சம்பிக்க, மனோ…