ஜெர்மனி பிரதமர் சென்ற விமானம் இயந்திர கோளாறால் அவசரமாக தரையிறக்கம்!

196 0

அர்ஜெண்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து ஜெர்மனி பிரதமர் பங்கேற்கும் முதல் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

 

உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகள் கொண்ட ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டிற்கான 13வது உச்சி மாநாடு அர்ஜெண்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் ஏய்ரேஸ் நகரில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

இந்திய சார்பில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர், ரஷ்ய பிரதமர், சவுதி இளவரசர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒன்று கூடுகின்றனர். அந்த வகையில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் பெர்லின் நகரில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜெண்டினா புறப்பட்டு சென்றார். அவருடன் அரசு உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் குழுவும் சென்றது.

நெதர்லாந்து நாட்டின்மீது நடுவானில் விமானம் பறக்கும்போது இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாது என விமான கூறவே, அவசரமாக விமானம் ஜெர்மனி நாட்டின் ரினே – வெஸ்ட்பாலியா மாநிலத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் இன்று நடைபெற்ற ஜி20 மாநாட்டில் ஏஞ்சலா மெர்க்கல் பங்கேற்க முடியாமல் போனது.

Related Post

வியட்நாம் புதிய அதிபராக நிகுயென் டிராங் பதவியேற்பு

Posted by - October 24, 2018 0
வியட்நாம் நாட்டின் புதிய அதிபராக நிகுயென் பூ டிராங் நேற்று பதவியேற்றார். வியட்நாம் அதிபராக இருந்த டிரான் டாய் குவாங், ஒரு ஆண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு…

புலமைப் பரிசில் பரீட்சையை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்

Posted by - October 20, 2018 0
மாற்றீடு ஒன்று இல்லாமையே, புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்ய முடியாமல் போயுள்ளமைக்கான காரணம் என பாடசாலைகள் சுகாதாரம் தொடர்பான தேசிய நிகழ்ச்சித் திட்டப் பொறுப்பாளரும் சமூக…

விண்வெளி பயணங்களை இடைநிறுத்தும் ரஷ்யா

Posted by - October 13, 2018 0
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சோயுஸ் ரொக்கெட்டில் நடுவானில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்…

அதிபரை நியமிக்கக் கோரிஆர்ப்பாட்டம்!!

Posted by - September 28, 2018 0
வவுனியா மூன்றுமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி வவுனியா தெற்கு வலயகல்வி அலுவலகத்திற்கு முன்பாக பெற்றோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒருவருடமாக…

நான் ஐ.தே.கட்சியுடன் இணையவில்லை- லசந்த மறுப்பு

Posted by - November 8, 2018 0
தனிப்பட்ட முக்கிய விஜயம் ஒன்றின் பேரில் தான் வெளிநாடு சென்றிருந்ததாகவும் அந்த நிலையில் தன்னைப் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் சில இணையத்தளங்கள் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளதாகவும்…