காதலிக்க மறுப்பு தெரிவத்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்

264 0

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளிக்கடையில் தக்கலையை சேர்ந்த மெர்சி(21) என்ற இளம் பெண் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில் திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த சண்முகம் மகன் ரவி(25) என்பவர் மெர்சியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இதனையடுத்து நேற்று மாலை பஸ் நிலையம் எதிரே வந்த மெர்சியிடம் ரவி தன் காதலை சொல்லி தன்னையும் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மெர்சி ரவியை காதலிக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மெர்சி கழுத்தில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மெர்சி ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மெர்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

Posted by - September 28, 2018 0
அநுராதபுரம் – சியம்பலகஸ்வெவ பகுதியில் காட்டு யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் இருந்து விவசாய காணிக்கு நேற்று இரவு சென்ற நபர் யானை தாக்கி…

பொதுபல சேனா தேரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் – ஜனாதிபதி கவலை

Posted by - November 19, 2018 0
சிங்களயே அபி தேசிய அமைப்பு உள்ளிட்ட மேலும் சில அமைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று (19) முற்பகல் அறிக்கையொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்திற்கு…

ஜனாதிபதிக்கு விளங்கும் பாஷையில் கூறுவதே அடுத்த கட்ட நடவடிக்கை- ஐ.தே.க.

Posted by - December 10, 2018 0
ஜனாதிபதிக்கு விளங்கும் பாஷையில் கூறுவதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்துமபண்டார ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்…

ஏமனில் வான்வழி – ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

Posted by - November 19, 2018 0
ஐ.நா கேட்டுக் கொண்டதற்கிணங்க , தாங்கள் சவூதி அரேபியா தலைமையிலான படைக்கு எதிரான வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதாக ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த…

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர்

Posted by - October 24, 2018 0
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் சீ.ஜே.பீ. சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.