நாயால் 50 ஆண்டு சிறை தண்டனையிலிருந்து தப்பித்த ஓரினச் சேர்க்கையாளர்!

235 0

அமெரிக்காவில் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 50 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற ஓரினச்சேர்க்கையாளர் ஒருவர் நாய் ஒன்றின் காரணமாக தண்டனையிலிருந்து தப்பித்துள்ளார்.

அமெரிக்காவில் ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ஹார்னர் (42). இவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். ஜோசுவா ஹார்னர் மீது ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸாட் ஜோசுவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜோசுவா தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும் தான் இந்த குற்றத்தில் ஈடுபடவில்லை என கூறினார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜோசுவா மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் சிறுமியின் வீட்டிற்குள் நிழைந்த ஜோசுவா ‘லூசி’ என்ற நாயை சுட்டுக்கொன்றதாக புகாரில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த நாய் வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த நாயை கண்டுபிடித்து அதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஜோசுவா 50 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Related Post

பாடகரும் சிங்கள திரைப்பட நடிகருமான ரோனி லீச் மரணம்

Posted by - October 2, 2018 0
பிரபல சிங்களப் பாடகரும் சிங்கள திரைப்பட நடிகருமான ரோனி லீச் நேற்று  தனது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்ன் நகரில் சங்கீதக் கச்சேரியொன்றில் கலந்துகொள்ளச்…

மைத்திரி கொலை தொடர்பில் ரகசியத்தை போட்டுடைத்த ஹரீன்

Posted by - November 9, 2018 0
இந்திய உளவுப் பிரிவினர் தம்மை படுகொலை செய்ய திட்டமிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் அலரி…

படுக்கையறைகளில் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துவதால் பாதிப்பு

Posted by - October 6, 2018 0
படுக்கையறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. படுக்கையறையில் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவதால், மூளை மற்றும் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படும் என…

3 குழந்தைகள் பெற்றால் இலவச நிலம்

Posted by - November 3, 2018 0
இத்தாலியில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு அர்சு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு…

வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

Posted by - November 19, 2018 0
வியட்நாமில் கடந்த சில வாரமாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நகரமான நா…