ஆணவக்கொலை: தந்தையே மகளை கொலை செய்தார்

295 0

ஓசூர் காதல் தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தந்தையே மகளை கொன்ற தகவல் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தீஷும் சுவாதியும் காதலர்கள். பட்டியலினத்தைச் சேர்ந்த நந்தீஷை சுவாதி திருமணம் செய்து கொண்டதை, அவரது பெற்றோர் விரும்பவில்லை. இதையடுத்து, காதல் தம்பதி, வீட்டை விட்டு வெளியேறி சூளகிரியில் வசித்து வந்தனர். அப்போது இருவரும் திடீரென மாயமானார்கள். எங்கு தேடியும் கிடைக்காததால் நந்தீஷின் சகோதரர் காவல்துறையிடம் புகார் செய்தார்.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பெலக்வாடியில் உள்ள காவிரி ஆற்றில் கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இருவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.

இந்த இரட்டைக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக காவல்துறையினர் சுவாதியின் தந்தை சீனிவாசன், உறவினர்கள் வெங்கடேசன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் சீனிவாசன் உள்ளிட்டோர் நந்தீஷ் – சுவாதி தம்பதியை காரில் கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது. சீனிவாசன் உள்பட ஏழு பேர், காதல் தம்பதியிடம், “நடந்தது நடந்துவிட்டது. இனி அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம். முதலில் கோயிலுக்குச் செல்லலாம்” எனக்கூறி தம்பதியை கடத்திச் சென்றிருக்கின்றனர்.

காரில் வைத்தே அவர்கள் காதல் தம்பதியை கடுமையாக அடித்து உதைத்து சித்திரவதை செய்திருக்கின்றனர். ஓசூரில் கொலை செய்தால் தெரிந்துவிடும் என்பதால் முன்பே தாங்கள் பார்த்து வைத்திருந்த இடமான பெலக்வாடிக்கு சுவாதி மற்றும் நந்தீஷை அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களின் கை கால்களை கட்டி உயிரோடு காவிரி ஆற்றில் தூக்கி வீசி கொன்றனர். இந்தக் கொலையில் சுவாதியின் தந்தை சீனிவாசன் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். பெற்ற மகளை தனது கையாலேயே கொடூரமாக தாக்கியிருக்கிறார். பிறகு கைகால்களைக் கட்டி, ஆற்றில் வீசியிருக்கிறார்.

சாதி வெறியால், பெற்ற மகளை தந்தையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே நேரம்கொலை நடந்த போது சுவாதி கருவுற்றிருந்ததாக வந்த தகவல் தவறு என்று காவல்துறை தெரிவிக்கிறது.

இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் கார் ஓட்டுநர் சுவாமிநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Post

உகண்டா நிலச்சரிவில் 31 பேர் பலி

Posted by - October 13, 2018 0
கிழக்கு உகண்டாவில் எல்கோன் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் உருவான வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் மழையை அடுத்தே கடந்த வியாழக்கிழமை மாலை இந்த…

106 வயதில் அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற மூதாட்டி!

Posted by - November 8, 2018 0
அமெரிக்க இடைத் தவணைத் தேர்தல் நாளன்று (நவம்பர் 6) எல் சல்வடோரைச் (El Salvador) சேர்ந்த 106 வயது மூதாட்டி அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளார். மத்திய அமெரிக்க…

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான சேவைகளும் தடைப்படக் கூடாது – ஜனாதிபதி

Posted by - December 6, 2018 0
எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான நலன்புரி சேவைகளும் தடைப்பட கூடாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார். குறித்த நிதியாண்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சகல நிதி…

ரணிலின் கட்சியில் இருந்துகொண்டு மகிந்தவிடம் அமைச்சு பதவி

Posted by - November 1, 2018 0
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருக்கும் நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக வனஜீவராசிகள்…

மஹிந்த பதவியேற்பதற்கு முன்பாக மூடிய அறையில் கூட்டமைப்பு பேசியது என்ன?

Posted by - October 27, 2018 0
இலங்கை அரசியலில் அதிரடியான திருப்பங்கள் இன்று முன்னிரவு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு சற்று முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின்…