ஆப்கன் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50 பேர் பலி

217 0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மதத் தலைவர்கள் கூடியிருந்தபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் குறைந்தது 83 பேர் காயமடைந்துள்ளனர்.

இது, அண்மைய மாதங்களில் காபூலில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.

ஆனால், குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆனால் அண்மைக் காலத்தில், ஐ.எஸ். மற்றும் தலிபான் அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இந்தத் தாக்குதலை தாம் நடத்தவில்லை என தலிபான் அமைப்பு மறுத்துள்ளது.

Related Post

தமிழ் அரசு கட்சியிலிருந்து வெளியேறிய சீ.வீ. விக்னேஸ்வரன்

Posted by - November 9, 2018 0
வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகுவதாக எழுத்து மூல அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் ஒப்படைத்துள்ளார்.…

அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை காட்டும் தேவை இல்லை- ஜனாதிபதி

Posted by - November 15, 2018 0
பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை உண்டா இல்லையா என்பதை காட்டும் தேவை நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நம்பிக்கைக்குரிய ஒருவரை பிரதமராக…

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு : ரஷ்ய பெண் மீது குற்றச்சாட்டு

Posted by - October 22, 2018 0
அமெரிக்காவில் நவ. 6-ல் நடைபெறவுள்ள தேர்தலில் தலையீடு செய்தது தொடர்பாக ரஷ்யப் பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்தவர் எலீனா அலெக்ஸீவ்னா கஷ்யநோவா. இவர்,…

கருத்துக்கணிப்பு என்னை பாதிப்பதில்லை!

Posted by - September 27, 2018 0
எந்த கருத்துக்கணிப்புக்களும் என்னை தடுத்து நிறுத்துவதில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இம்மானுவல் மக்ரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் இருந்தே பல்வேறு நிறுவனங்கள் ஜனாதிபதியிம் நன்…

கோத்தாபய ராஜபக்ஸவுக்கு வந்த ஜனாதிபதி ஆசை

Posted by - November 4, 2018 0
அமைச்சராவதில் தாம் உண்மையில் விரும்பம்கொண்டிருக்கவில்லை எனக் கூறியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தான் ஜனாதிபதி ஆவதையே மக்கள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,…