மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படும்

169 0

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதை குழி அகழ்வு பணியானது மீண்டும் எதிர் வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படும் என குறித்த அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 104 வது தடவையாக இடம் பெற்ற அகழ்வு பணியானது கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை தொடர்ந்து 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற போதிலும் அகழ்வு பணிகள் இடம் பெறவில்லை. இவ்விடயம் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

தமக்கும்,மனித புதைகுழி அகழ்வுகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கும் குழுவினருக்கும் எதிர் வரும் இரண்டு வாரங்களில் கையாளப்பட வேண்டிய அதிக வேலையின் காரணமாக குறித்த அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை வழமை போல் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதே வேளை குறித்த அகழ்வு பணிகளின் போது இது வரை 235 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும்,அவற்றில் 229 மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.

Related Post

இந்தோனேசியாவை சுக்குநூறாக்கிய சுனாமி :பலி எண்ணிக்கை 1,200 ஆக அதிகரிப்பு

Posted by - October 1, 2018 0
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,203 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான…

கேமரூனில் 79 பேர் விடுவிப்பு

Posted by - November 8, 2018 0
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசுவோர் வசிக்கும் பமென்டா நகரில் பள்ளி குழந்தைகள் உட்பட, 79 பேர் கடத்தப்பட்டனர். அந்நாட்டு அரசு மற்றும் ராணுவம் கடத்தப்பட்டவர்களை…

அமெரிக்காவின் டெக்சாஸில் கனமழை

Posted by - October 17, 2018 0
அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மைக்கேல் புயல் புரட்டிப்போட்ட நிலையில் தற்போது டெக்சாஸ் மாகாணத்தில்…

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை

Posted by - December 10, 2018 0
பிரதமர், அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்படுமென நம்பிக்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தான்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு : ரஷ்ய பெண் மீது குற்றச்சாட்டு

Posted by - October 22, 2018 0
அமெரிக்காவில் நவ. 6-ல் நடைபெறவுள்ள தேர்தலில் தலையீடு செய்தது தொடர்பாக ரஷ்யப் பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்தவர் எலீனா அலெக்ஸீவ்னா கஷ்யநோவா. இவர்,…