கஜா புயல் பாதிப்பு: இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்

266 0

அதிகாலை கரையை கடந்த கஜா புயல் தமிழகத்தில் பலத்த சேதத்த ஏற்படுத்தி உள்ள நிலையில், புயல் காரணமாக 8 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிகாலை 2.30 மணி அளவில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்த கஜா புயல் அந்த மாவட்டத்தை சூறையாடி சின்னபின்னமாக்கி சென்றுள்ளது. சுமார் 120 கி.மீ வேகத்தில் சூறாவளி மற்றும் கனமழையுடன் கரையை கடந்த புயல் காரணமாக ஆயிரக்கணக்கான ஏராளமான மரங்கள், நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள், செல்போன் கோபுரங்கள் என பயங்கர சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.

கஜா புயலின் தாக்கும் இன்னும் தொடர்ந்து வருகிறது. மழை மற்றும் காற்று தொடர்ந்து வருகிறது. மேலும் சில மணி நேரம் புயலின் தாக்கம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.‘

இந்த நிலையில் பட்டுக்கோட்டை சிவக்கொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் ஆகிய 4 பேர் பலியாகி உள்ளனர். இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், தஞ்சை மாவட்டம் அதிராமப்பட்டினத்தில் வீடு இடிந்து பெண் குழந்தை ஒன்று பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுபோல, கடலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, வீட்டிற்குள் இருந்த பெண் ஒருவர் பலியானார். இவரின் கணவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மின்சாரம் தாக்கி ஆனந்த் என்பவர் உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் வடமணப்பாக்கத்தில் வீட்டின் சுவர இடிந்து விழுந்த தில் 7 வயது சிறுமி ப்ரியாமணி பலியானார்., மேலும் 4 பேர் படுகாயத்துடன் செய்யார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கஜா புயலின் கோர தாண்டவம் காரணமாக இதுவரை 8 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..இது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கஜா புயல் காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்து உள்ளது. மேலும் மின்சார இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளும் மெதுவாகவே நடைபெற்று வருகின்றன.

நிறைய இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்து இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Post

ரசாயனக்கலப்பால் பதஞ்சலி தயாரிப்புகளுக்கு கத்தாரில் தடை

Posted by - October 11, 2018 0
அரபுநாடான கத்தாரில் ரசயனம் கலந்துள்ளதால் பதஞ்சலி தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல யோகா ஆசிரியரும் தொழிலதிபருமான பாபா ராம்தேவ் நடத்தும் நிறுவனம் பதஞ்சலி ஆகும். பாஜகவுக்கு மிகவும்…

தெரிவுக் குழு உறுப்பினர்களை பெயரிடுவதில் ஏற்ப்பட்டுள்ள சிக்கல்

Posted by - November 22, 2018 0
பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு உறுப்பினர்களைப் பெயரிடுவதில் தற்போது இழுபறிநிலை நிலவுகின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியதை அடிப்படையாகக் கொண்டே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் சபாநாயகரே தெரிவுக்…

குடிநீர் திட்டம் கிண்ணியாவில் ஆரம்பம்

Posted by - November 19, 2018 0
கிண்ணியா பைசல் நகர் நபவி பள்ளி வாயல் பின் வீதிக்கான பிரதான குடி நீர் குழாய் இணைப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டது. குறித்த குழாய் நீர் பதிப்பதற்கான அங்குரார்ப்பண…

பிரெக்ஸிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு: இங்கிலாந்தில் 4 அமைச்சர்கள் இராஜினாமா

Posted by - November 17, 2018 0
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் இங்கிலாந்தில் 4 அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர். இதனால் பிரதமர் தெரசா மே நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில்…

ஆற்றில் நீராடிய மூவர் மரணம்

Posted by - November 10, 2018 0
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கற்கும் இணுவிலைச் சேர்ந்த செல்வரட்ணம் திஷாந்தன் உட்பட மேலும் இருவர் இன்று மதியம் ஆற்றில் நீராடச் சென்றவேளை காலமானார்கள். இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என…