ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு! இன்று நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்?

202 0
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை முறையாக நிரூபிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கட்சிகளுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய , ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை தம்மிடம் உள்ளதாகவும் அதனை ஏற்றுக்கொள்ளுமாறும் குறித்த கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியல் அமைப்பின் பிரகாரமே செயற்படுவதாகவும் அதற்கு மதிப்பளிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் சம்பிரதாயத்திற்கு மதிப்பளித்து பெரும்பான்மையை முறையாக நிரூபிக்குமாறு குறித்த தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணையை பாராளுமன்றத்தில் இன்று மீண்டும் சமர்ப்பித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்துமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில், அரசியலமைப்பின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்திற்குள் அமைதியை உறுதிப்படுத்தி ஜனநாயகம் மற்றும் நிலையியற்கட்டளைகளுக்கு அமைய செயற்படுமாறும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Post

பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி 100 மில்லியன் ரூபா முதல் 150 மில்லியன் ரூபா வரை

Posted by - November 12, 2018 0
பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி 100 மில்லியன் ரூபா முதல் 150 மில்லியன் ரூபா வரையிலும் சிலவேளைகளில் இன்னும் சில உறுப்பினர்களின் பெறுமதி 500 மில்லியன் ரூபாவாகவும் விலைபோகும்…

இந்தியாவிலிருந்து வந்த 3 பெண்கள் உட்பட நால்வர் கைது

Posted by - November 23, 2018 0
14 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் நால்வரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த…

கேமரூனில் 79 பேர் விடுவிப்பு

Posted by - November 8, 2018 0
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசுவோர் வசிக்கும் பமென்டா நகரில் பள்ளி குழந்தைகள் உட்பட, 79 பேர் கடத்தப்பட்டனர். அந்நாட்டு அரசு மற்றும் ராணுவம் கடத்தப்பட்டவர்களை…

பாராளுமன்ற கலைப்பு   நடவடிக்கையால் ஆபத்திற்குள்ளாகியுள்ள பல விடயங்கள்

Posted by - November 11, 2018 0
ஜனாதிபதியின்பாராளுமன்ற கலைப்பு   நடவடிக்கையால் பல விடயங்கள் ஆபத்திற்குள்ளாகியுள்ளன மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதார முன்னேற்றத்தையும் இலங்கையின் சர்வதேச கௌரவத்தையும் பாதிக்கலாம் எனவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை…

பிரேரணையை முன்வைத்த கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு

Posted by - November 15, 2018 0
நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிய பின்னர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கட்சித் தலைவர்கள் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று…