100 ரூபாவை திருப்பித்தரவில்லை என, உதய கம்மன்பில மீது மக்கள் முறைப்பாடு

160 0

பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் 100 ரூபா பணத்தை திருப்பித் தருமாறு மக்கள் கோரியதனால் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்து உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் பார்வையிடுவதற்காக உதய கம்மன்பில உச்ச நீதிமன்றம் சென்றிருந்தார்.

இதன் போது உச்ச நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த சிலர், அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் தாங்கள் கொடுத்த 100 ரூபா பணத்தை திரும்ப தருமாறு கோரியுள்ளனர்.

உதய கம்மன்பில கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தலா 100 ரூபா மக்களிடம் கோரிப் பெற்றுக் கொண்டார் எனவும் அதனை திரும்பத் தருமாறும் மக்கள் கோரியிருந்தனர்.

இதேவேளை, உதய கம்மன்பில மக்கள் ஆணையை புறந்தள்ளியதனால் பணத்தை திரும்பத் தருமாறு கோரியுள்ளனர்.

பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தும் உதய கம்மன்பில பணத்தை திரும்ப தரவில்லை என அங்கிருந்த ஒருவர் கூறியுள்ளார். நீதிமன்றம் அருகாமையில் சத்தம் போட வேண்டாம் என குழுமியிருந்தவர்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

Related Post

கொழும்பில் ஏற்பட்ட கோர விபத்து

Posted by - November 27, 2018 0
கொழும்பை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான…

பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியவர் கட்சியிலிருந்து நீக்கம்

Posted by - October 16, 2018 0
இந்தியாவின் பெரம்பலூரில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், அழகுக்கலை நிலையத்திற்கு சென்று பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய தி.மு.கவின் முன்னாள் தலைவர் செல்வகுமாரின் CCTV காட்சி தற்போது இணையத்தளங்களில்…

நன்னீர் வளர்ப்பு இறால்களின் விலை வீழ்ச்சி

Posted by - November 7, 2018 0
புத்தளம் மாவட்டத்தில் நன்னீர் வளர்ப்பு இறால்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது இறால் அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், அவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இறால் பண்ணையாளர்கள்…

பெரும்பான்மையை நெருங்குகிறார் மகிந்த…? அரசியல் நெருக்கடி முடிவுக்கு வருமா…?

Posted by - November 4, 2018 0
இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலை அடுத்து வரும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து யார் பிரதமர் என்பதை உறுதி…

பிரான்ஸ் தீவில் குடியேறும் இலங்கையர்கள்!

Posted by - October 22, 2018 0
இலங்கைக்குள் வசிக்கும்  சில குழுக்களினால், நபர்களிடம் பணம் பெற்று கொண்டு கடல் வழியில் பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான Réunion தீவில் குடியேற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளதென வெளிவிவகார…