தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிரான மனுக்களின் மீதான முடிவு இன்று

119 0

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான விசாரணையின் முடிவு இன்று (13) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் நேற்று (12) காலை முதல் 10 இற்கும் மேற்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய குழு முன்னிலையில் நேற்றைய தினமே மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் சுயாதீன அமைப்புக்களும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - October 17, 2018 0
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் சிலவற்றை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய மன்னாரில் 23 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 53 ஏக்கர் காணியும்,…

மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி

Posted by - October 23, 2018 0
மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பு -ஜனாதிபதி மலையக மக்களுக்கு முதற்தடவையாக நிரந்தர காணி…

ஸ்ரீ ல.சு.கட்சியை அரசாங்கத்திலிருந்து விலகுமாறு கட்சிக்குள் அழுத்தம்

Posted by - October 13, 2018 0
கூட்டரசாங்கத்திலிருந்து விலகுமாறு ஸ்ரீ ல.சு. கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு முன்வைத்துள்ள பிரேரணையை உடன் அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அரசாங்கத்திலிருந்து…

30 ஆயிரம் பேரை நிர்க்கதிக்குள்ளாக்கிய வடக்கில் பெய்த மழை

Posted by - December 23, 2018 0
வடக்கில் பொழியும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களில் இருந்தும் 6 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 521 பேர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு பல…

ஒரு மாதத்தில் 5 முறை கட்சி தாவியவர், 3 முறை கட்சி தாவியர்

Posted by - November 22, 2018 0
மக்களை மடையர்கள் என நினைத்துக் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளை அடுத்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அதற்காக மக்களை அறிவுறுத்துவதற்கு “மார்ச் 12 இயக்கம்” திட்டமிட்டுள்ளதாகவும்…