நான் ஐ.தே.கட்சியுடன் இணையவில்லை- லசந்த மறுப்பு

214 0

தனிப்பட்ட முக்கிய விஜயம் ஒன்றின் பேரில் தான் வெளிநாடு சென்றிருந்ததாகவும் அந்த நிலையில் தன்னைப் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் சில இணையத்தளங்கள் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியான செய்தி குறித்து அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளதாகவும் அரச ஊடகமொன்று அறிவித்துள்ளது.

எனது அரசியல் வாழ்க்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்தவும் அதன் அங்கத்துவத்தை அதிகரிக்கவுமே அர்ப்பணித்துள்ளேன். சுதந்திரக் கட்சியுடன் இணைந்து மக்களின் நன்மைக்காக பாடுபடுவதில் நான் திடமாக இருக்கிறேன்.

நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் நாட்டின் எதிர்கால நன்மைக்காக நேர்மையாக செயற்படுவேன். அதேபோல் இந்த இரு தலைவர்களுக்கும் அனைத்து பேதங்களையும் மறந்து அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related Post

5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை இரத்து செய்யுமாறு கோரிக்கை

Posted by - October 17, 2018 0
5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நீதி சமூகத்துக்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரத்…

நாடக கலைக்கு புத்துயிர் அளிக்கும் லண்டன் பயிற்சி பட்டறை

Posted by - October 17, 2018 0
மேடை நாடகத்தை இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் லண்டனில் நாடக பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. லண்டனின் ராயல் ஓபரா ஹவுஸ் மேடை நாடகத்திற்கு…

இலங்கை இராணுவத்துக்கு எதிரான ஜெனீவா குற்றச்சாட்டு தொடரும்- அமெரிக்கா

Posted by - November 25, 2018 0
இலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஜெனீவா யுத்தச் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற…

அதிரடி வியூகத்தை கையில் எடுத்த ரணில் தரப்பு!

Posted by - November 19, 2018 0
சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக மறுத்து வரும் நிலையிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை பதவிநீக்க மறுத்து வரும் நிலையிலும், பிரதமர் செயலகத்தை செயற்பட…

சபரிமலை கோயில் நடை புதன்கிழமை திறப்பு

Posted by - October 20, 2018 0
கேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த மாதம் 28–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின்…