நாமலுக்கு சவால் விடுத்துள்ள சுமந்திரன்!

104 0

“கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கினால், அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்போம் என நாமல் ராஜபக்‌ச கூறுவதை விட, அவருடைய தந்தை பிரதமர் பதவியை ஏற்றுள்ளமையால், அரசியல் கைதிகளை முடிந்தால் இன்றைக்கே விடுதலை செய்யட்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சவால் விடுத்துள்ளார்.

அப்படி செய்தால் நாம் அவர்களுக்கு ஆதரவளிப்பது பற்றிப் பரிசீலிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாமல் ராஜபக்ச டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“எத்தனை கோடி ரூபாய் கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலைபோகமாட்டாது என்று தெரிவித்துள்ள கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் உறுப்பினரான வியாழேந்திரன் மரம் தாவியுள்ளார்.

அவருக்கு உரிய நடவடிக்கைகளை எமது கட்சி எடுக்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் எம்மால் உருவாக்கப்பட்டவர்களே.

தன்னுடைய அரசியல் வாழ்க்கை, இந்தத் தடவையுடன் ஆறடி மண்ணில் குழிதோண்டிப் புதைக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தெரிவித்திருந்தார்.

எனினும், தற்​போது மகிந்த ராஜபக்சவுன் கூட்டுச்சேர்ந்து, ஜனநாயகத்தை மீறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்” எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post

கர்ப்பிணி மனைவியோடு கணவனும் தூக்கில் தொங்கிய சோகம்.

Posted by - December 13, 2018 0
சென்னையைச் சேர்ந்த தனியார் மொபைல் போன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய சாரதி(32 வயது) என்பவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் பிரசாந்தி (21 வயது) என்ற பெண்ணைத்…

மூன்று மாவட்டங்களில் 17372 பேர் பாதிப்பு, 6 பேர் பலி

Posted by - October 8, 2018 0
நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் அடை மழை, காற்று என்பவற்றால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கடந்த மூன்று தினங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும்…

கொழும்பில் நிகழ்ந்த அதிசயம்! வீதியெங்கும் திரண்ட மக்கள்!!

Posted by - October 26, 2018 0
இலங்கையின் மேற்கே கொழும்பில் நேற்றைய தினம் வானவில் தோன்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நேற்று மாலை கீழ்வானில் தோன்றிய இரண்டு வானவில் கொழும்பில் இருந்த மக்கள் அனைவரையும்…

பிரிட்டன் இளவரசர் ஹாரி முதல் குழந்தைக்கு தந்தையாகிறார்

Posted by - October 16, 2018 0
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) கடந்த மே மாதம் விண்ட்சோர் நகரில் உள்ள புனித…

பாராளுமன்றத்தைக் கலைப்பது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டாலேயே

Posted by - November 8, 2018 0
தேவைப்படுகின்ற போது உரிய காலத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் புதிய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமாக இருப்பதனால்…