தலிபான் பயங்கரவாத குழு தலைவர் மவுலானா ஷமி உல் ஹக் சுட்டுக்கொலை

68 0

பயங்கரவாத அமைப்பான தலிபான் அமைப்பை உருவாக்கிய மவுலான ஷமி உல் ஹக் பாகிஸ் தானில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் நாடுகளை பயங்கரவாதம் மூலம் அச்சுறுத்தி வரும் பயங்கரவாத அமைப்பான தலிபான் அமைப்பை உருவாக்கியவரும், தலிபான் அமைப்பின் தந்தை என அழைக்கப்படுவருமான மவுலான ஷமி உல் ஹக் பாகிஸ்தான் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி நகரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது 82 வயதான ஷமி உல் ஹக், தாருல் உலாம் ஹக்கினா என்ற பல்கலை கழகத்தை நிர்வகித்து வந்தார். அந்த பல்கலை கழகத்தில் தான் தலிபான் பயங்கரவாத அமைப்பு முதலில் உருவாக்கப்பட்டது.

தற்போது பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது ஆட்சிக்கு ஷமி ஆதரவு தெரிவித்து வந்தார். இதன் காரணமாக அவர்மீது மற்ற பயங்கரவாத குழுக்கள் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரை சுட்டுக்கொன்றது யார் என்ற விவரம் தெரியவில்லை. இதன் காரணமாக பாகிஸ்தானில் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Post

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறுகிறது

Posted by - December 6, 2018 0
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அடுத்த ஆண்டு ஜூலை 3 முதல் 7-ம் தேதி வரை சிகாகோவில் நடைபெறவுள்ளது.…

வேண்டாத பெண்டாட்டியாக மாறுமா புதிய அரசாங்கம்

Posted by - December 15, 2018 0
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை (16) காலை 10.00 மணிக்கு புதிய பிரதமராக மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன…

ஒரு தலைப்பட்ச காதலால் மாணவியை சுட்டுத் தள்ளிய இளைஞன்

Posted by - December 13, 2018 0
உத்தரப் பிரதேசம் சகரன்பூர் பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஜூலியை அதே இடத்தில் வசிக்கின்ற திபு என்ற இளைஞன் ஒருதலைப் பட்சமாகக் காதலித்து…

அரசாங்கத்துக்குள் என்ன நடைபெறுகின்றது

Posted by - December 6, 2018 0
அரசாங்கத்துக்குள் என்ன நடைபெறுகின்றது என்பதை அறியாதவர்களாக இந்த நாட்டின் அப்பாவி மக்கள் இருக்கின்றதாகவும், அவர்கள் அறியாதவற்றை அறிவுறுத்தி நாட்டைப் பாதுகாக்கும் பணியையே தான் செய்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்…

பத்திக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம்

Posted by - November 22, 2018 0
நாட்டில் பத்திக் (Batik) கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக, கிராமிய கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. தொழிலற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…