சிறப்புப் பூஜைக்காக திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன்

189 0

சபரிமலை கோயில் நடை, சிறப்புப் பூஜைக்காக இன்று திறக்கப்படவுள்ளது.

இதனால், நாளை வரை, பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என இந்திய உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.

உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, சமூக செயற்பாட்டாளர்கள் இருவர் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முற்பட்டமைக்கு பக்தர்களால் எதிர்ப்பு வௌியிடப்பட்டது.

இதனிடையே, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஐப்பசி பூஜை முடிவடைந்த நிலையில் மூடப்பட்ட நடை, மண்டல பூஜைக்காக இன்று திறக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இன்று செல்வதற்கு இதுவரை எந்தப் பெண்ணும் அனுமதி கோரவில்லை என கேரளா பொலிஸா் தெரிவித்துள்ளனர்.

Related Post

சபாநாயகருக்கு 10 வருட சிறைத்தண்டனை

Posted by - November 8, 2018 0
தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் கொழும்பு 7 மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளது. ஆரம்பத்தில் மஹிந்த…

மந்திர கோலுடன் மஹிந்த! சர்வதிகார ஆட்சி தொடருமா?

Posted by - December 7, 2018 0
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் வைத்திருந்த தனது மந்திர கோலை மீண்டும் கையில் எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் காலப்பகுதியில் மந்திர…

14 ஆம் திகதி முதல் 4 பாராளுமன்ற அமர்வுகளுக்கும் வராதவர்கள்

Posted by - November 23, 2018 0
பாராளுமன்றத்துக்கு கடந்த 14, 15, 16 மற்றும் 19 ஆம் திகதிகளில் வருகை தராதவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளன. நவம்பர் 14 ஆம் திகதி அ.ந.சிவசக்தி திலும்…

துரித விசாரணை நடத்த சட்ட திருத்தங்கள் அவசியம்

Posted by - October 13, 2018 0
தனியார்துறையில் இடம்பெறும் பாரிய இலஞ்ச, ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு ஏது வாக சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாசா…

8 அரசியல் கைதிகளில் 6 பேர் புனர்வாழ்விற்கு மாற்ற இணக்கம்

Posted by - October 3, 2018 0
அநுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பில் ஈடுபடும் 8 அரசியல் கைதிகளில் 6 பேர் புனர்வாழ்விற்கு மாற்ற இணக்கம் அதேபோன்று எஞ்சி 42 வழக்கு இடம்பெற்று வரும் அரசியல்…