ராஜீவ் கொலை – 7பேரின் விடுதலை குறித்து மீண்டும் கடிதம்

121 0

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.

முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கு பரிந்துரைசெய்து, தமிழக அரசினால் ஆளுநருக்கு அனுப்பட்டது.

எனினும், இது குறித்து ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் இதுவரை எவ்விதத் தீர்மானத்தையும் வௌியிடவில்லை.

இந்நிலையில், குறித்த 7 பேரை விடுதலைசெய்யும் விவகாரம் தொடர்பில் நினைவூட்டல் கடிதத்தை தமிழக அரசு அனுப்பியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

7 பேரை விடுவிக்க, தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்திவதற்கு ஆளுநர் காலஅவகாசம் எடுத்துக்கொள்ள, சட்டத்தில் இடமில்லை என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.

இதனிடையே, தமிழக அரசின் தீர்மானத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் காணப்படுமாயின், ஆளுநர் செயல்பட இயலாது என்ற காரணத்தை காட்ட வழியில்லை என்பதை பல்வேறு வழக்குகளையும் மேற்கோள்காட்டி தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும், மாநில அமைச்சரவை முடிவெடுத்ததன் பின்னர், ஆளுநரின் தனிப்பட்ட முடிவுக்கு இடமில்லை எனவும் தமிழக அரசு அரசியல்சாசனப் பிரிவுகளை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பியுள்ளதாகவும் ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Related Post

மீண்டும் பிரதமராக ரணில்!

Posted by - December 12, 2018 0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக முக்கிய அரசியல் செயற்பாட்டாளர் ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர் நீதிமன்றின் தீர்ப்பு வெளியானவுடன்…

பெரும்பான்மையை நெருங்குகிறார் மகிந்த…? அரசியல் நெருக்கடி முடிவுக்கு வருமா…?

Posted by - November 4, 2018 0
இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலை அடுத்து வரும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து யார் பிரதமர் என்பதை உறுதி…

காட்டு யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

Posted by - October 12, 2018 0
வெலிக்கந்தை ருகுணுகெத கிராமத்தில் ஓடைக்குள் விழுந்து உயிரிழந்த காட்டு யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சோமாவதிய வனப் பிரதேசத்தில் சுற்றித்திரிந்த யானையே உயிரிழந்திருப்பதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

மகிந்த மைத்திரி பலமடைந்த இரகசியம் கசிந்தது

Posted by - November 3, 2018 0
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை நியமித்ததில் இருந்து நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பல்வேறு பட்ட சர்ச்சைகளும்…

சர்ச்சைக்குரிய எரிபொருள் விலைச் சூத்திரம் மக்கள் பார்வைக்கு

Posted by - October 19, 2018 0
எரிபொருள் விலையேற்றம் குறைப்பு என்பவற்றுக்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் அறிமுகம் செய்திருந்த சர்ச்சைக்குரிய விலைச்சூத்திரம் நிதி அமைச்சினால் மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டது. அரசாங்க தரப்பிலுள்ளவர்கள் உட்பட யாரும் அறியாத நிலையில்…