மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானே குழப்பத்தை விதைக்கிறது – ட்ரம்ப்

214 0

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான், குழப்பம், மரணம் மற்றும் அழிவை விதைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றியபோது ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலக வல்லரசுகள் கைச்சாத்திட்ட ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியமையை நியாயப்படுத்தும் வகையில் அவருடைய உரை அமைந்திருந்தது.

இதேவேளை, இந்தியா பல இலட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டு நடுத்தர வர்க்கமாக மாற்றியிருப்பதாகவும் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், வட கொரியாவுடன் அமெரிக்கா தமது உறவை மேம்படுத்திக் கொண்டமை மற்றும் சீனாவுடனான வர்த்தக உறவில் கடும்போக்கை கடைப்பிடித்தமை ஆகியவை மிகச்சரியான நடவடிக்கைகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், அமெரிக்காவின் இறையாண்மையை மதிக்குமாறு பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து நாடுகளிடமும் கோருவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related Post

ஜமால் கசோஜி கொலை: குற்றவாளிக் கூண்டில் யார்

Posted by - October 24, 2018 0
பிரபல பத்திரிகையாளரும், சவுதி அரசாங்கத்தின் விமர்சகருமான ஜமால் கசோஜி, இஸ்தான்பூலில் உள்ள தூதரகத்துக்கு சென்று காணாமல் போய் இரண்டு வாரங்களுக்கு மேலாகி உள்ளது. காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை…

`கடல் நம்பமுடியாத அளவு கடினமாக இருந்தது!’ – 3 நாள் நடுக்கடலில் போராடிய டோமி உருக்கம்

Posted by - October 6, 2018 0
மூன்று நாள்களாக நடுக்கடலில் சிக்கித் தவித்த இந்திய கடற்படை அதிகாரியான அபிலாஷ் டோமி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அபிலாஷ் டோமி கோல்டன் க்ளோப் எனப்படும் பாய்மர…

பேஸ்புக்கில் மீண்டும் 5 கோடி மக்களின் தகவல்கள் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

Posted by - September 30, 2018 0
இந்தியர்களின் கணக்குகள் உள்பட 5 கோடி பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பர்க் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் இந்தியர்களின் பேஸ்புக்…

பனிப்புயலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

Posted by - October 14, 2018 0
நேபாளத்தில், மலையேற்றம் சென்ற எட்டு பேர், பனிப்புயலில் சிக்கி பலியாகினர். அண்டை நாடான, நேபாளத்தில், குர்ஜா மலை சிகரம் உள்ளது. இங்கு மலையேற்றம் மேற்கொள்வதற்காக, கிழக்கு ஆசிய…

2020ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைக்க சீனா திட்டம்

Posted by - September 29, 2018 0
உலக நாடுகளுக்குப் போட்டியாக விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சீனா சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. சீனா வரும் 2022ம் ஆண்டுக்குள்…