3 குழந்தைகள் பெற்றால் இலவச நிலம்

167 0

இத்தாலியில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு அர்சு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள், “இத்தாலி உள்ளிட்ட மேலை நாடுகளில் மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான முதியோர்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மக்கள் தொகையை உயர்த்தவும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி இத்தாலியில் மூன்றாவது குழந்தை பெறுபவர்களுக்கு இலவசமாக நிலம் அளிக்கப்படும்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலியில் சமீபத்தில் எடுத்த புள்ளி விவரத்தின்படி, சுமார் மூன்று லட்சம் குடும்பத்தினர் இரண்டு குழந்தைகளுடன் உள்ளனர். மேலும் இவர்கள் இனி குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று முடிவு செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டின் பிறப்பு விகிதத்தின் படி இத்தாலியில் 4 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2016 ஆம் ஆண்டை விட 2% குறைவு. எனவே குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

உத்தேச குற்றப்பிரேர​ணையைத் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது

Posted by - November 10, 2018 0
ஜனாதிபதிக்கு எதிரான உத்தேச குற்றப்பிரேர​ணையைத் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது என முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொறுப்புள்ள ஓர் அரசியல் இயக்கம்…

பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு

Posted by - October 17, 2018 0
வடக்கு அயர்லாந்தை சேர்ந்த எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் என்ற பெணணுக்கு, 2018 ம் ஆண்டிற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘மில்க்மேன்’ என்ற புத்தகத்திற்காக அவருக்கு பரிசு…

இந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு

Posted by - October 18, 2018 0
தன்னை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விடயத்தில் இந்திய புலனாய்வுப் பிரிவினருக்குத் தொடர்பு இருப்பதாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியதாக வெளியான செய்திகளை ஜனாதிபதி ஊடகப்…

மகிந்தவிடம் சம்பந்தன் முன் வைத்த நிபந்தனை!

Posted by - October 30, 2018 0
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்பின் 16 எம்.பிக்களின் ஆதரவு தனக்கு மிகவும் அவசியம் என்று சம்பந்தனிடம் மஹிந்த தெரிவித்திருக்கிறார். இதற்கு, கூட்டமைப்பின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன்…

படையினருக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் – இலங்கையே விசாரிக்க வேண்டும்

Posted by - October 10, 2018 0
இலங்கை படையினருக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச தலையீடு அவசியம் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக மாணவர்கள்…