தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்

217 0

எவ்வித தட்டுப்பாடுமின்றி அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலதிக பௌவுஸர்களும் பயன்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாக தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மேலதிக கொள்வனவைத் தவிர்த்து வழமைபோன்று எரிபொருளைக் கொள்வனவு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

நேற்று முன்தினம் பிற்பகல் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைமையகத்தில் இடம்பெற்ற அமைதியின்மையில் தமது அங்கத்தவர் ஒருவர் உயிரிழந்தமையைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோலியத்துறைத் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தன.

இந்த நிலைமைக்குக் காரணமான முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று மாலை கைது செய்யப்பட்டமையை அடுத்து, முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

முன்னாள் புலிகளை மஹிந்த – மைத்திரி அரசு விடுவிக்கும் – நாமல் உறுதி

Posted by - November 3, 2018 0
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து மஹிந்த – மைத்திரி தலைமைமயிலான புதிய அரசாங்கம் விடுதலை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ…

தமிழ் அர­சி­யல்க் கைதி­களை விடு­விக்க ஆர்ப்பாட்டங்கள்

Posted by - October 8, 2018 0
நீண்­ட­கா­ல­மா­கச் சிறை­ க­ளில் அடைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல்க் கைதி­களை விடு­விக்கவேண் டும் என்று வலி­யு­றுத்­தி­யும், சிறைச்­சா­லை­க­ளில் உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டு­வ­ரும் அர­சி­யல் கைதி­க­ளுக்­குப் பலம் சேர்க்­கும் வகை­யி­லும்…

மசகு எண்ணெய் விலை உலக சந்தையில் அதிகரிப்பு

Posted by - September 26, 2018 0
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக உலக பொருளாதார தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, ஒரு பீப்பா மசகு எண்ணெய் 81.20 டொலர்களாக அதிகரித்துள்ளது. டபிள்யு.…

புலிகளோடு புலியாக இருந்த இணுவையூர் சிதம்பரச்செந்திநாதன் மறைந்தார்

Posted by - October 17, 2018 0
தமிழீழ மண்ணினதும் மக்களினதும் அசைவியக்கத்தை… போரின் பதிவுகளை இலக்கியமாக வடித்த ‘இணுவையூர் சிதம்பரச்செந்திநாதன்’ காலம் ஆனார். இவருக்கு அகவை 66. கடந்த 46 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்துக்கு…

அமைச்சரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Posted by - November 1, 2018 0
கேரள நீர்பாசனத்துறை அமைச்சரின் பாதுகாவலர் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். திருவனந்தபுரம் ஆயுதப்படை முகாமில் காவலர் பணியில் உள்ளவர் சுஜித். கடைக்கல் பகுதியை சேர்ந்த…