புதிய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக இருவர்

198 0

அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த சமரசிங்க தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளராக செயற்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் இன்று (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த அரசாங்கத்தில் மைத்திரி தரப்பு, ரணில் தரப்பு என்பவற்றிலிருந்து இருவர் இருந்தது போன்று, இந்த அரசாங்கத்திலும் மஹிந்த தரப்பு, மைத்திரி தரப்பு என்பவற்றிலிருந்து இருவர் வீதம் ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஜெர்மனி பிரதமர் சென்ற விமானம் இயந்திர கோளாறால் அவசரமாக தரையிறக்கம்!

Posted by - December 1, 2018 0
அர்ஜெண்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து ஜெர்மனி பிரதமர்…

ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கான ஆர்ப்பாட்ட பேரணி

Posted by - November 15, 2018 0
ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இன்று (15) பகல் 2 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு…

அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் எஸ்.வியாழேந்திரன்!

Posted by - November 3, 2018 0
தமிழ் மக்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கிலேயே தாம் அமைச்சுப்பதவியினை பெற்றுக்கொண்டதாக கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சராக நேற்று பதவிப்பிரமானம் செய்து…

விலைக்கு வாங்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியே அமைச்சுப் பதவி வழங்கினார்

Posted by - November 13, 2018 0
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்ட விலையின் பெறுமதியை ஜனாதிபதியே அறிந்து வைத்துள்ளார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி  ஆற்றிய உரை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே…

கேவலங்கெட்ட காட்டுமிராண்டி பிக்கு ரவிகரன் கொந்தளிப்பு

Posted by - January 25, 2019 0
முல்லைத்தீவு – நாயாறு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் குடியிருக்கும் பிக்கு கேவலங்கெட்ட காட்டுமிராண்டி பிக்கு எனத் தெரிவித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் .…