ரணில் விக்ரமசிங்க தன்னிச்சையாக முடிவு எடுத்தார்: மைத்திரி குற்றச்சாட்டு

74 0

முன்னாள் முதல்வர் ரணில் விக்ரமசிங்கே தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்சனை எழுந்ததாக இலங்கை அதிபர் சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது: ரணில் விக்ரமசிங்கே தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்னை ஏற்பட்டது.

கூட்டாக முடிவு எடுக்கக் கூடாது என்பதில் ரணில் பிடிவாதமாக இருந்தார். இலங்கையில் என்னை கொல்ல நடந்த சதியில் அமைச்சர் ஒருவருக்கும் பங்கு இருந்தது.

கொல்ல சதி நடந்ததால் வேறு வழியின்றி ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க வேண்டியதாயிற்று.

சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி அரசியலமைப்பின் படியே ராஜபட்சே நியமனம் நடைபெற்றது. ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கியதில் அரசியலமைப்பு விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை.

2015ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றது முதலே விக்ரமசிங்கேவின் நடவடிக்கை எதிர்பாராத வகையில் இருந்து வந்தது.

தன்னுடைய கர்வம் காரணமாகவே அவர் நீக்கம் செய்யப்பட்டார். மக்களை பற்றிய சிந்தனையே இல்லாத ஒரு கூட்டத்தை தன்னுடன் வைத்துக் கொண்டு விக்ரமசிங்கே ஆட்சி செய்து வந்தார்.

ஊழல்கள் செய்து நல்ல ஆட்சி என்பதற்காக அர்த்தத்தையே அழித்துவிட்டார். கொள்கை முடிவுகள் எடுப்பதில் எங்களுக்கு இடையே பெரிய இடைவெளி இருந்தது. இவ்வாரு அவர் கூறினார்.

Related Post

பிரதான முஸ்லிம் கட்சிகள் ஓரணியில் செயற்பாடு !!

Posted by - November 12, 2018 0
பிரதான முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் செயற்படுவதற்கு பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பயணிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத்…

பாராளுமன்ற கலைப்பு   நடவடிக்கையால் ஆபத்திற்குள்ளாகியுள்ள பல விடயங்கள்

Posted by - November 11, 2018 0
ஜனாதிபதியின்பாராளுமன்ற கலைப்பு   நடவடிக்கையால் பல விடயங்கள் ஆபத்திற்குள்ளாகியுள்ளன மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதார முன்னேற்றத்தையும் இலங்கையின் சர்வதேச கௌரவத்தையும் பாதிக்கலாம் எனவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை…

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்டுவோம்

Posted by - November 9, 2018 0
நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்டுவோம். இதனை யாராலும் தடுக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று -08- மாலை இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக்…

ரசாயனக்கலப்பால் பதஞ்சலி தயாரிப்புகளுக்கு கத்தாரில் தடை

Posted by - October 11, 2018 0
அரபுநாடான கத்தாரில் ரசயனம் கலந்துள்ளதால் பதஞ்சலி தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல யோகா ஆசிரியரும் தொழிலதிபருமான பாபா ராம்தேவ் நடத்தும் நிறுவனம் பதஞ்சலி ஆகும். பாஜகவுக்கு மிகவும்…

யேமன் முக்கிய சமாதான பேச்சுவார்த்தை ஸ்வீடனில் ஆரம்பம்!

Posted by - December 7, 2018 0
யேமனில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வருகின்ற உள்ளக போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலான சமாதானப் பேச்சுவார்த்தை, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஆரம்பமாகியுள்ளது. இதுவொரு…