பதவியேற்ற மஹிந்த-தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா

150 0

சமகாலத்தில் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக, தமது நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பில் பிரித்தானியா கரிசனை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்று வரும் திடீர் அரசியல் மாற்றம் காரணமாக அவதானமாக இருக்குமாறும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அல்லது விசேட அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், இலங்கைக்கு செல்லும் போது குறுகிய கால விசா பெற்றுக்கொள்ளுமாறும் பிரித்தானிய பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.முழுமையான பயண மற்றும் மருத்துவ காப்பீடு பெற்றுக் கொள்ளுமாறு பிரித்தானிய சுற்றுலா பயணிகளிடம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடரைப் பார்க்க இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணிகளுக்காக விசேட வழிகாட்டி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.இலங்கையின் நிலைமை தொடர்பில் தொடர்ந்து ஆராய்ந்து சுற்றுலா பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரித்தானியா விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதுடன், நாட்டில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற தோற்றப்பாடு உருவாக்கியுள்ளது.இந்நிலையில் தமது நாட்டு பிரஜைகளுக்கு பிரித்தானியாவின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

Related Post

முஸ்லிம்களுடைய சகல பிரச்சினைகளுக்கும், எனது தலைமையில் தீர்வு காணப்பட்டது – மகிந்த

Posted by - November 13, 2018 0
கடந்த கால யுத்தின் போது வட கிழக்கு பகுதிகளில் முஸ்லிம்கள் அனுபவித்த சகல பிரச்சினைகளுக்கும் எனது தலைமையிலான அரசிலேயே தீா்வு காணப்பட்டது. முதுாரில் ஏற்பட்ட பிரச்சினைகள், முஸ்லிம்கள்…

ஒரு தலைப்பட்ச காதலால் மாணவியை சுட்டுத் தள்ளிய இளைஞன்

Posted by - December 13, 2018 0
உத்தரப் பிரதேசம் சகரன்பூர் பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஜூலியை அதே இடத்தில் வசிக்கின்ற திபு என்ற இளைஞன் ஒருதலைப் பட்சமாகக் காதலித்து…

இதய சத்திரசிகிச்சையில் வெற்றிகண்ட யாழ் மருத்துவருக்கு பாராட்டு

Posted by - October 8, 2018 0
யாழ்.போதனா மருத்­து­வ­ம­னை­யில் இரு­தய சத்­திர சிகிச்­சை­யினை வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்ட இரு­தய நெஞ்­சறை சத்­திர சிகிச்சை நிபு­ணர் மட்­டு­வி­லைச் சேர்ந்த சிதம்­ப­ர­நா­தன் முகுந்­த­னுக்குத் தென்­ம­ராட்சி பிர­தேச மக்­கள் முன்­னெ­டுத்த…

பொலிசார் வழங்கும் குற்றப் பத்திரங்கள் தமிழில் வழங்க ஏற்பாடு

Posted by - December 23, 2018 0
யாழ்ப்பாணத்தில் பணியில் உள்ள பொலிசார் வழங்கும் குற்றப் பத்திரங்கள் தமிழில் வழங்க ஏற்பாடு செய்வதாக பொலிசார் இணங்கியதோடு வரி அனும்மிப்பத்திரம் காட்சிப் படுத்த தவறியிருந்தால் அது தண்டனைக்குரிய…

காமிக் உலகின் பிதாமகன் ஸ்டான் லீ காலமானார்

Posted by - November 14, 2018 0
காமிக் உலகின் பிதாமகன் என்று அழைக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த ஸ்டான் ஸ்டான் லீ காலமானார். அவருக்கு வயது 95. அவருக்கு உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கண்ணீர்…