இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை

192 0

இத்தாலியில் ஆலங்கட்டி மழை பெய்த காரணமாக சாலைகள்  முழுதும் பனி மூடிக் காணப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தலைநகர் ரோம், பிசா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்ட பகுதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை புயலோடு மழையும் தாக்கியது. சாலைகளில் ஆலங்கட்டி மழைப் பொழிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

பனிக்கட்டிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இறுக்கமாகி பாறை போல் மாறியது. இதனால் சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்களை இயக்க முடியாமல் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இத்தாலிய தலைநகரின் கிழக்குப் பகுதியில் ஆலங்கட்டி மழை அதிகமாக பொழிந்தது. அங்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சாலைகள் முழுவதும் மூடி மறைந்தது.

மேலும் நகரத்தில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தின் நகரும் படிக்கட்டின் மீது பனிக்கட்டி நீர் ஆறு போல ஓடியது. நகரில் பல்வேறு இடங்களில், பேருந்துகள் மற்றும் கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சில சாலைகளில் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. புளோரன்ஸ், பிசா, மிலன் மற்றும் வடக்கு இத்தாலியின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதனை சீரமைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Post

அரசாங்கத்தை நாளைக்கு ஒப்படைத்தாலும் பொருளாதாரத்தை சீர்செய்வோம்- மஹிந்த

Posted by - September 27, 2018 0
நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கான வழியைக் கூறுமாறு இந்த அரசாங்கம் தன்னிடம் கோருவதாகவும், எம்மிடம் அரசாங்கத்தை ஒப்படைத்தால் தாம் அதனைச் செய்து காட்டுவோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

ஐ.நா அமைதி காக்கும் படையினரை கோரிய ரணில்

Posted by - October 30, 2018 0
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரை இலங்கையில் கடமையில் ஈடுபடுத்துமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் கோரியதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம்…

98 வயது தோழியை மனைவிக்கு அறிமுகம் செய்துவைத்த இளவரசர் ஹரி

Posted by - October 17, 2018 0
இளவரசர் ஹாரி தனது மனைவி மேகன் மார்கலுடன் ஆஸ்திரேலியா சென்றார். அங்கு தனது 98 வயது தோழியை சிட்னியில் உள்ள இல்லத்தில் சந்தித்தார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்…

சேவை மூப்பு அடிப்படையிலேயே பிரதம நீதியரசரின் பெயர் முன்மொழிவு

Posted by - October 13, 2018 0
நீதித்துறை வரலாற்றில் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழேயே முதற்தடவையாக சேவை மூப்பு அடிப்படையில் பிரதம நீதியரசர் பதவிக்கு பெயர் முன்மொழியப்பட்டுள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சட்ட மா…

இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஐ.ம.சு.மு. ஆதரவு வழங்க தீர்மானம்

Posted by - December 21, 2018 0
விசேடமாக மக்களுக்கு எதிரான பிரேரணைகள் எதுவும் காணப்படாது போனால் அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரும் இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர…