வருட இறுதிக்குள் இராணுவத்திடமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு

203 0

இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாண ஆளுநர்களுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இதற்கமைய பாதுகாப்பு பிரிவினர் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் வழங்கும் நடவடிக்கையை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யுமாறும் ஜனாதிபதி ஆளுநர்களுக்கு அறிவித்தார்.

2018 ஆம் ஆண்டுக்கான மாகாணசபை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி ஆளுநர்களுக்கு இப்பணிப்புரையை விடுத்தார். ஜனாதிபதியுடனான இக்கலந்துரையாடலில் மாகாணங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Post

இலங்கையில் திடீர் சுற்றிவளைப்பு! 6 மணித்தியாலத்தில் 2500 பேர் கைது

Posted by - September 30, 2018 0
இலங்கையில் 6 மணித்தியாலங்களில் 2500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் இந்த கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும்…

மைத்திரி மீது கடும் கோபத்தில் சமந்தா பவர்!

Posted by - October 31, 2018 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தமது…

இன்று ஜனாதிபதியின் விசேட உரை

Posted by - October 28, 2018 0
தற்போழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதேவேளை…

தமிழர் தாயகமெங்கும் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 26, 2018 0
தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நல்லூரில் திலீபன் உண்ணாவிரதமிருந்து…

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரியைக் குறைப்பதற்குத் தீர்மானம்

Posted by - December 1, 2018 0
பழச்சாறு தயாரிப்பிற்கான, ஒரு கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சத வரியை 30 சதமாகக் குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. பழச்சாறு மற்றும் பிஸ்கட் தயாரிப்பு நடவடிக்கைகளில்…