தனியார் பேரூந்து தடம்புரண்டது: மூவர் படுகாயம்

188 0

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் பயணித்த தனியார் பேரூந்து தடம் புரண்டதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக வவுனியா நகர் நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து மடுகந்தப் பகுதியில் பயணித்த போது வேகக் கட்டுப்பட்டை இழந்து தடம் புரண்டது. திருத்த வேலைக்காக மடுக்கந்த பகுதிக்குச் சென்று வந்த பேரூந்தே விபத்துக்குள்ளானது. இதன்போது இதில் மூவர் மாத்திரமே பயணித்திருந்தனர். அம் மூவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

கூரிய ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை

Posted by - November 16, 2018 0
பாராளுமன்றத்திற்கு கூரிய ஆயுதத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களின் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள்…

தலைமைத்துவப் பொறுப்பு சுமத்தப்படின் ஏற்று முன்கொண்டு செல்ல தான் தயார்

Posted by - November 25, 2018 0
கட்சியின் தலைமையினாலும், கட்சியின் மத்திய செயற்குழுவினாலும் தன்னிடம் தலைமைத்துவப் பொறுப்பு சுமத்தப்படின் அதனை ஏற்று முன்கொண்டு செல்ல தான் தயாராகவே உள்ளேன் என ஐக்கிய தேசியக் கட்சியின்…

இருபது இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் மேற்கொண்ட வழக்கில் 13 வயதுடைய சிறுவன்

Posted by - September 29, 2018 0
இருபது இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்காரம் மேற்கொண்ட 13 வயதுடைய சிறுவன் ஒருவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். Picardie நகரில் வைத்து இவன் கைது…

காலையில் நாட்டையே உலுக்கிய சோகம்!

Posted by - September 25, 2018 0
கோர விபத்தொன்றில் தாயும் அவரது இரு மகள்களும் உயிரிழந்ததுடன், மகன் காயமடைந்துள்ளார். இந்தக் கோர விபத்து பொத்துவில் – அக்கறைப்பற்று வீதியில் இன்று (25.9.2018) காலை இடம்பெற்றுள்ளது.…

அந்த நால்வருக்கு அமைச்சுப் பதவிகள் ஆயத்தம்

Posted by - November 4, 2018 0
கூட்டு எதிரணியைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில…