கயவர்கள் கைகளில் நாட்டை ஒப்படைக்க முடியாது

122 0

நாட்டினை மீண்டும் கயவர்களின் கைகளில் ஒப்படைக்க முடியாது எனவும், நாட்டில் காணப்படும் இனவாதங்கள், மதவாதங்கள், மொழிவாதங்களுக்கு எப்போதும் நாங்கள் எதிரிகளாகவே இருப்போம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த நாட்டினை மீண்டும் ஒருமுறை நாடகக்காரர்களுக்கும் வேசம் தரிப்பவர்களுக்கும் ஒப்பனைகலையாமல் மேடைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஏழை எளிய மக்களின் பசித்த வயிறு தெரியாதவர்களுக்கும் வழங்கமுடியுமா?

கடந்த ஆட்சியில் பேச்சு சுதந்திரம் இருக்கவில்லை, ஊடக சுதந்திரம் இருக்கவில்லை, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர், ஆர்ப்பாட்டங்கள் செய்தவர்கள் இனங்காணப்பட்டு படுகொலை செய்யும் நிலமையும் காணப்பட்டது. எந்த சுதந்திரமும் அந்த ஆட்சிக்காலத்தில் இருக்கவில்லை.

தாங்களும் தங்கள் குடும்பங்களும் நாட்டினை சூறையாடிவிட்டு இந்த நாட்டு மக்களை ஒரு பொருட்டாக கொள்ளாமல் தங்களது நிலைப்பாடுகளையே நாட்டின் குறிக்கோளாக கொண்டு செயற்பட்டனர்.

அவ்வாறான கயவர்களுக்கு இந்த நாட்டினை தொட்டு தழுவுவதற்கு நாட்டினை கொடுக்கப்போகின்றீர்களா?, இதனை ஒவ்வொருவரும் தங்களது மனசாட்சியுடன் சிந்தித்து பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் பெற்ற அனுபவத்தினை சிந்தித்துபாருங்கள்.

எமது நல்லாட்சியில் இந்த பகுதியில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகாணியை நாங்கள் வழங்கியுள்ளோம். கடந்த ஆட்சியில் ஒருகடுகளவாவது காணிகள் வழங்கப்பட்டுள்ளதா? இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதா?. அவர்கள் இதனையெல்லாம் செய்யமாட்டார்கள், அவர்கள் இவ்வாறானவற்றை தங்களுக்குள் பங்குபோட்டுக்கொள்ளுவார்கள்.

மதவாதங்களை உருவாக்கி, இனவாதங்களை உருவாக்கி சமய ஸ்தலங்களை எரித்துவிட்டு அதில் குளிர்காய்ந்தவர்கள் மக்களினால் விரட்டியக்கப்பட்டனர். மீண்டும் ஒருமுறை எரித்த சமய ஸ்தலங்களுக்கு வருகைதந்து வழிபாடுகளில் கலந்துகொள்கின்றனர்.

இவர்கள் தொடர்பில் மக்கள் நன்றாக சிந்திக்கவேண்டும், அவர்களை வேறுபடுத்தி பார்க்கவேண்டும். இந்த நாட்டில் ஜனநாயகத்தினை அடக்க ஒடுக்கி ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் நாட்டின் வளங்களை சூறையாடியவர்கள், மக்களின் வாழ்விடங்களை அழித்தவர்கள் மீண்டும் ஒருமுறை ஆட்சியில் அமர்ந்து கொள்ளவேண்டும், அந்த மாளிகையில் பள்ளி கொள்ள வேண்டும் என சிந்திக்கின்றனர்.

இந்த நாட்டினை நாங்கள் கயவர்களின் கைகளில் ஒப்படைக்கமாட்டோம். அதேபோன்று இந்த நாட்டில் காணப்படும் இனவாதங்கள், மதவாதங்கள், மொழிவாதங்களுக்கு எப்போதும் நாங்கள் எதிரிகளாகவே இருப்போம்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மதங்கள், மொழிகளை மறந்து ஒருதாய் பிள்ளைகள்போல் நாம் அனைவரும் ஒன்றாக வாழவேண்டும்.

அதற்காக கடந்த காலத்தில் கசப்பான அனுபவங்களை கொண்டுவந்த தலைவர்களை மீண்டும் ஒருமுறை சிங்காசனத்தில் அமரவைப்பதா அல்லது வீடுகளுக்கு வந்து உங்களது தேவைகளை நிறைவேற்றுபவர்களுக்கு இந்த நாட்டில் இடமளிப்பதா என்பதை மக்களே சிந்திக்கவேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

Related Post

12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்

Posted by - October 1, 2018 0
மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கை யைப் பெறுவீர்கள்.…

யாழில் வீடு புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்!

Posted by - September 30, 2018 0
யாழ்ப்பாணம், மானிப்பாயில் வீடு புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு…

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் ஆரம்பம்

Posted by - October 21, 2018 0
முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று(சனிக்கிழமை) மக்கள் பலர் ஒன்றுகூடி முள்ளியவளை துயிலுமில்லப் பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்…

விலைக்கு வாங்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியே அமைச்சுப் பதவி வழங்கினார்

Posted by - November 13, 2018 0
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்ட விலையின் பெறுமதியை ஜனாதிபதியே அறிந்து வைத்துள்ளார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி  ஆற்றிய உரை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே…

மூன்று நீள்விரல்கள் கொண்ட விசித்திர குள்ள உருவங்கள்!

Posted by - December 15, 2018 0
ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பல பில்லின் ​ெடாலர்கள் செலவு செய்து ஏலியன்களை( வேற்றுக்கிரகவாசிகள்) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ஆனால் இன்று வரை ரஷ்யாவுக்கும்…