கமுதி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோயில் திருவிழா!

290 0

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, ஆண்கள் மட்டும் இரவு முழுவதும் அம்மனை வழிபட்ட வினோத திருவிழா நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஆண்கள் மட்டும் கிடாவெட்டி வழிபாடு நடத்தும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

திருவிழா நடக்கும் தேதி அறிவித்தபின் ஒரு வாரத்துக்கு அந்த வழியாக பெண்கள் யாரும் செல்ல மாட்டார்கள். மழை பெய்ய வேண்டியும், நோய் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்தாண்டுக்கான திருவிழா தேதி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குறிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு அம்மன் வழிபாடு நடைபெற்றது.ஆண்கள் ஒன்று கூடி பீடம் அமைத்து கைக்குத்தல் பச்சரிசி சாதம் செய்து, 50 கிடாய்களைப் பலியிட்டனர். பின்னர் சாதம் உருண்டைகளாக உருட்டப்பட்டு பீடத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்டது. பனை ஓலையால் செய்த மட்டையில் சாப்பாடு பரிமாறப்பட்டு அனைவரும் சாப்பிட்டனர்.

இதில் கமுதி, முதல்நாடு, முஷ்டக்குறிச்சி, அரிசிக் உழுதான், கே.நெடுங்குளம், பெருமாள்குடும்பன்பட்டி, ஆசூர், திருசெல்லையாபுரம், தலைவநாயக்கன்பட்டி, விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள கிராமங்கள் என 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்துமூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.

Related Post

2019ம் ஆண்டின் டிரம்ப் – கிம் மீண்டும் சந்திப்பு

Posted by - December 21, 2018 0
2019-ம் ஆண்டு துவக்கத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜோங்.உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவு அமைச்சர் கூறினார். வடகொரியாவும் அமெரிக்காவும் பகைமையை…

அதிநவீன ஏவுகணையைப் பரிசோதித்தது பாகிஸ்தான்!

Posted by - October 9, 2018 0
அணு ஆயுதங்களுடன் இலக்கைச் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்ததாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன…

6வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞருக்கு தூக்கு

Posted by - October 19, 2018 0
6வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. அதைத் தொடர்ந்து, இறந்த சிறுமியின் தந்தை முன்னிலையில் அந்த காமுகனுக்கு…

நாமல் குமார நாளை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு

Posted by - September 23, 2018 0
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள ஊழல் எதிர்ப்பு அமைப்பின் தலைவர் நாமல் குமாரவை எதிர்வரும் திங்கட்கிழமை அரச இரசாயனப் பகுப்பாய்வுத்…

வீட்டுதிட்ட திறப்பு விழாவில் சிங்கள மொழியில் தேசிய கீதம்

Posted by - October 21, 2018 0
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீட்டுதிட்ட திறப்பு விழாவில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் கவலை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பில் நேற்று(சனிக்கிழமை) காலை இடம்பெற்ற…