சபரிமலை கோயிலை பூட்டுவேன்!

212 0

“ஆச்சாரங்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்தால் சபரிமலை கோயிலை பூட்டுவேன்” என்று கோயிலின் தந்திரி கண்டரரு ராஜீவரு அதிரடியாக தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்தது. இதையடுத்து சபரிமலைக்கு பெண்களும் வருவதற்கான ஏற்பாடுகளை கேரள அரசு செய்தது. சபரிமலை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆர்.எஸ்.எஸ். உட்பட சில இந்து அமைப்புகள் சில, சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடாது என போராட்டம் நடத்தின. மேலும், சபரிமலை அருகே கூடி, அய்யப்பனை தரிசிக்க வரும் பெண்களை தாக்கி திருப்பி அனுப்பின.

இதனால் பல இடங்களில் மோதல், தடியடி ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டது. வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பம்பையில் இருந்து சபரிமலை நோக்கி ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா உட்பட இரண்டு பெண்கள் அய்யப்பனை தரிசிக்க சென்றனர். வர்கள் அய்யப்பன் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது இருக்கின்றனர்.

இவர்களுக்கு ஐஜி ஸ்ரீஜித் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

ஆனால் இந்த நிலையில் திடீரென கேளர அரசு, இந்த இரு பெண்களை திருப்பி அனுப்பும்படி காவல்துறைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இருவரில் ஒருவர் பத்திரிகையாளர் மற்றவர் பெண்ணியவாதி. மற்றபடி இருவரும் பக்தர்கள் அல்ல என்று கேரள அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருவரும் பாதுகாப்பாக சபரிமலை பகுதியில் உள்ள வனத்துறை விருந்தினர் இல்லத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அய்யப்பனை தரிசித்துவிட்டே திரும்புவோம் என்று வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுடன் கேரள மாநில காவல்துறை ஐ.ஜி. சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சூழல் சரியில்லை என்பதால் தற்போது அவர்கள் சபரிமலை அய்யப்பனை தரிசிக்காமல் திரும்புவது நல்லது என்று அவர் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் -சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு, “ஆச்சாரங்களுக்கு எதிராக ஏதாவது சம்பவங்கள் சபரிமலையில் நடந்தால் சந்நிதான நடையை அடைத்துப் பூட்டி சாவியை தேவஸ்வம் போர்டு அதிகாரிகளிடம் கொடுத்து விட்டுத் திரும்பிச்செல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Post

புதிய அமைச்சரவையில் 30 பேர்

Posted by - October 28, 2018 0
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை இன்று  சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இந்நிலையில் புதிய…

பொலிஸ் திணைக்களம் முழுவதும் மறுசீரமைக்கப்பட வேண்டும்

Posted by - October 3, 2018 0
பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸ் திணைக்களம் என்பன மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு…

இன்றுமுதல் அதிகரிக்கும் புகையிரத கட்டணம்

Posted by - October 1, 2018 0
புதிய கட்டணங்கள் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, புகையிரத கட்டணம் 15 சத வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்தக்…

யாழ்மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடானது வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம்

Posted by - December 13, 2018 0
யாழ் மாநகரத்தின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடானது வாக்கெடுப்பு இன்றி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம். யாழ்ப்பாணம் மாநகரசபையின் 3ஆவது…

மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றும் பூமி

Posted by - October 6, 2018 0
இந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்தால்…