போதநாயகியின் மரணத்தை தொடர்ந்து ஈழத்தமிழர்களை சோகத்தில் ஆழ்த்திய மற்றுமொரு சோகம்!

1692 0

கடந்த 21-ம் திகதி செந்தூரன் போதநாயகி என்ற கர்ப்பிணி பெண் விரிவுரையாளர் திருகோணமலை நகர கடற்பரப்பில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுடன் மரணம் தொடர்பில் பல சர்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில்.,

இன்றைய (24.09.2018) தினம் திருகோணமலை சேருநுவர சீனவெளி பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கைத்துறை, முகத்துவாரப் பகுதியைச் சேர்ந்த, 34 வயதுடைய வடிவேல் யோகராசா என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை தொழிலுக்குச் சென்றதாகவும் மாலையில் வீடு வராததால் உறவினர்கள் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில், அவர் இன்று சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உடலில் பாரியளவில் எட்டு காயங்கள் காணப்படுவதாகவும் இது கொலையாக இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தொடர் சம்பவங்கள் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

2021க்கு பின் ஏஞ்சலா மேர்கெல் போட்டியில்லை

Posted by - October 30, 2018 0
ஐரோப்பிய நாடான, ஜெர்மனியின் அதிபராக பதவி வகிப்பவர், ஏஞ்சலா மேர்கெல், 64; கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியைச் சேர்ந்தவர். இவரது பதவிக்காலம், 2021ல் முடிவடைகிறது. அதன்பின், அவர்…

காலநிலை அறிக்கை

Posted by - December 6, 2018 0
நாட்டில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை நிலை படிப்படியாக வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில்…

பீடாதிபதி உட்பட 14 பிரிவுகளின் தலைவர்கள் இராஜினாமா

Posted by - October 10, 2018 0
ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி மற்றும் மேலும் 14 பிரிவுகளின் தலைவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். இவர்களின் இராஜினாமாக் கடிதங்கள் நேற்று (09) மாலை…

ஜப்பான் உயிரியல் பூங்காவில் ஊழியரை தாக்கி கொன்ற வெள்ளைப்புலி

Posted by - October 11, 2018 0
ஜப்பான் உயிரியல் பூங்காவில் ஊழியர் ஒருவரை வெள்ளைப்புலி கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் ககோஷிமா நகரில் ஹிரகவா உயிரியல் பூங்கா உள்ளது.…

ஐ.நா. கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு

Posted by - October 14, 2018 0
ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கவுன்சில் உறுப்பினர் நாடாக, இந்தியா தேர்வு செய்யப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின், 193 உறுப்பினர்கள், ஐ.நா., மனித…