தொழிலமைச்சர் – இ.தொ.கா நேற்று முக்கிய பேச்சுவார்த்தை

181 0

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் நேற்றைய தினம் இ.தொ.கா வுக்கும் தொழிலமைச்சர் ரவீந்திர சமரவீரவுக்குமிடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது இ. தொ. கா தொழிலமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளது.

சம்பளப் பிரச்சினை தொடர்பில் அனைத்து விடயங்களையும் இ. தொ.கா தொழிலமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில் சுமுகமான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தோட்டக் கம்பனிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக இதன்போது தொழிலமைச்சர் தெரிவித்துள்ளார். கம்பனிகளுடனான பேச்சுவார்த்தையின் பின் மீண்டும் இ. தொ. கா வை சந்திக்கப்போவதாகவும் இதன்போது அவர் இ. தொ. கா பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய இந்த பேச்சுவார்த்தை தொழிலமைச்சில் இடம்பெற்றுள்ளதுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து நேற்றும் மலையகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒத்துழையாமை போராட்டம் நேற்று ஆரம்பமானமையும் குறிப்பிடத்தக்கது.

Related Post

கொல்லப்பட்டவர்களின் உடற்பாகங்களை கடத்திய மெக்ஸிகோ தம்பதி கைது!

Posted by - October 9, 2018 0
கொல்லப்பட்டதாக கருதப்படும் குறைந்தது 10 பெண்களின் உடற்பாகங்களை கடத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தம்பதியொன்று தொடர்பாக மெக்ஸிகோ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இழுவை வண்டியொன்றில் குறித்த…

பசுபிக் கடலில் நிலநடுக்கம் – சுனாமிக்கு வாய்ப்பு!

Posted by - December 6, 2018 0
பசுபிக் கடலின் தெற்குப் பகுதியான நியு காலிடோனியாவில் கடலுக்கு ஆழத்தில் 7.6 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் அந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை…

ஜனாதிபதியின் உத்தரவுகளை மட்டுமே கேட்பேன்! – பொலிஸ்மா அதிபர் அதிரடி

Posted by - November 8, 2018 0
ஜனாதிபதியினால் வழங்கப்படும் உறுதியான ஆலோசனை மற்றும் கட்டளைக்கமைய மாத்திரமே, பொலிஸ் திணைக்களம் செயற்படும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை…

கமுதி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோயில் திருவிழா!

Posted by - October 20, 2018 0
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, ஆண்கள் மட்டும் இரவு முழுவதும் அம்மனை வழிபட்ட வினோத திருவிழா நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராமத்தில்…

நிருவாகம் தெரியாத அரசாங்கம் – மகிந்த சாடல்

Posted by - October 8, 2018 0
இந்த அரசாங்கத்துக்கு ரூபாவை நிருவகிக்கவும் முடியாதுள்ளது, நாட்டை நிருவகிக்கவும் தெரியாதுள்ளது, கொழும்பு குப்பைகளை நிருவகிக்கவும் இயலாத ஒரு நிலையில் காணப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…