தாயின் கொலை பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

85 0

யாழ்ப்பாணம் ஊரெழுவில் நேற்று இரவு இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில், தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊரெழு மேற்கில் மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை, இனந்தெரியாத கும்பல் தாக்கியதில் தாயார் உயிரிழந்தார்.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இன்று காலை கோப்பாய் பொலிஸாரின் சிறப்பு அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கு அண்மையில் நேற்றிரவு 8 மணியளவில் சம்பவம் இடம்பெற்றது.

வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்தக் கொலையைச் செய்தது எனவும், சம்பவத்தில் 54 வயதுடைய குடும்பப் பெண் கொலை செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடரில் கொல்லப்பட்டவரின் மகன் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி,

“நேற்று வீதியில் சென்ற என்னுடன் சிலர் முரண்பட்டுக் கொண்டனர். அவர்கள் மேலும் சிலருடன் 8 பேராக எனது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகளில் வந்தனர். கையில் பொல்லுகள் மற்றும் கம்பிகளுடன் வந்த அவர்கள் என்னைத் தாக்கினார்கள். அவர்கள் என்னைத் தாக்குவதை அம்மா தடுத்தார். அப்போது அம்மாவின் தலையில் பொல்லு மற்றும் கம்பியால் அவர்கள் தாக்கினார்கள். அம்மா என் முன்னிலையில் துடிதுடித்து உயிரிழந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Post

பிரதமர் நாளை நோர்வே விஜயம்

Posted by - October 2, 2018 0
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (03) நோர்வே செல்லவுள்ளார். பிரதமரின் இவ்விஜயத்தில், அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்ஷா, பாராளுமன்ற உறுப்பினர்…

பிரிட்டன் இளவரசர் ஹாரி முதல் குழந்தைக்கு தந்தையாகிறார்

Posted by - October 16, 2018 0
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) கடந்த மே மாதம் விண்ட்சோர் நகரில் உள்ள புனித…

நிலச்சரிவால் சீனாவில் உருவான செயற்கை ஏரி

Posted by - October 20, 2018 0
கடந்த புதன் கிழமை அன்று காலை, திபெத்தின் யார்லுங் சாங்போவில் ஆழமான பள்ளத்தாக்கு ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பாயும் ஆற்றின் போக்கில் தடை ஏற்பட்டுள்ளது.…

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்து செல்பி எடுத்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்

Posted by - October 26, 2018 0
வெளிநாட்டிலிருந்து இலங்கை சென்ற இளைஞன் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டிக்கு இடையிலான ரயில் வீதியில் செல்பி எடுக்க முற்பட்ட…

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்றுடன் ஓய்வு

Posted by - October 12, 2018 0
பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்று ஓய்வு பெற உள்ளார். இலங்கையின் 45வது பிரதம நீதியரசராக இருந்த பிரியசாத் டெப் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 02ம்…