பனிப்புயலில் சிக்கிய 9 மலையேறிகளின் உடல்கள் மீட்பு

230 0

நேபாளத்திலுள்ள இமயமலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீசிய கடுமையான பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த ஒன்பது மலையேறிகளின் உடல்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட மலையேற்றக் குழுவினரும், நேபாளைத்தை சேர்ந்த நான்கு வழிகாட்டிகளும் சுமார் 23,600 அடி உயரத்திலுள்ள குர்ஜா சிகரத்திலுள்ள முகாமில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடந்த இரண்டாண்டுகளில் நேபாளத்தில் நடந்த மோசமான மலையேறும் விபத்தாக இது கருதப்படுகிறது.

பனிப்புயலின் தீவிரம் குறைந்த பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்த மலையேறும் வீரர்களின் உடல்களை மீட்கும் பணி தொடங்கியிருந்தது.

“பனிப்புயல் வீசியபோது இமயமலையின் உச்சியிலிருந்து பனிப்பாறைகள் அவர்களின் கூடாரத்தைச் சேதப்படுத்தியதால் அங்கிருந்தவர்கள் உயிரிழந்தனர்” என்று மீட்புதவியாளரான சுராஜ் தெரிவித்துள்ளார்.

“வழக்கத்தை விட அதிகமான உயரத்தில் கூடாரத்தை அமைத்தது உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக இருக்குமென்று கருதுகிறோம். ஆனால், முழு விசாரணையை நடத்திய பிறகே மற்ற விடயங்கள் குறித்து கூற இயலும்” என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்த மலை ஏற்றத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், மலையேறிகளுடன் தொடர்ந்து 24 மணிநேரத்துக்கும் மேல் எவ்வித தகவல் தொடர்பும் இல்லாததால் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

பனிப்புயலினால் உயிரிழந்த ஒன்பது பேர்களின் உடல்களும் மீட்கப்பட்டு நேபாளத்தின் போக்ஹாரா விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அந்நாட்டின் தலைநகரான காத்மண்டுவிற்கு ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது.

நேபாளைத்தை சேர்ந்த நான்கு வழிகாட்டிகளின் உடல்களும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த ஐந்து தென் கொரிய மலையேறிகளின் உடல்கள் வரும் புதன்கிழமைக்குள் சோல் நகருக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுவதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆக்சிஜன் உதவி இல்லாமலேயே உலகின் அதிக உயரமான முதல் 14 மலைச் சிகரங்களில் ஏறி சாதனை படைத்த தென்கொரியாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் கிம் சாங்-ஹோவும் உயிரிழந்தவர்களில் ஒருவராவார்.

நேபாளத்தில் அமைத்துள்ள உலகிலேயே மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் இதுவரை 8000க்கும் அதிகமானவர்கள் ஏறியுள்ளனர். ஆனால், இதுவரை குர்ஜா சிகரத்தை அடைந்தவர்கள் வெறும் 30 பேர் மட்டுமே.

Related Post

ஐ.தே.முன்னணி சார்பில் தெரிவுக் குழுவுக்கு ஐந்து பேர்

Posted by - November 23, 2018 0
பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளாக ஐந்து பேர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டாளி சம்பிக்க, மனோ…

மக்கள் அபிமானம் வென்ற வைத்திய நிபுணர் ரகுபதி மாரடைப்பால் உயிரிழந்தார்

Posted by - December 11, 2018 0
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதிகாலை 2.30 மணியளவில் இணுவிலில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது,…

சிறப்புரிமைக்கு களங்கம் – குற்றம் சுமத்தும் ஹிருணிகா

Posted by - October 10, 2018 0
தெமட்டகொடையில் இளைஞர் கடத்தல் தொடர்பில் நானோ எனது சட்டத்தரணியோ குற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியால் எனது சிறப்புரிமைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்தார்.…

ஐ.நாவில் இலங்கை மீது கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டுள்ள சிறீதரன் எம்.பி

Posted by - September 29, 2018 0
இலங்கை தீவில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் போர் முடிந்து சுமார் 9 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அந்த பகுதிகள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அபிவிருத்தி செய்தல்…

தகுதி, திறமை கொண்டவர்கள் அமெரிக்காவுக்கு வரலாம்- டொனால்ட் டிரம்ப்

Posted by - October 16, 2018 0
அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் ஐ.டி. துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ஏராளமான இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல பல்வேறு நாட்டினரும்…