மக்கள் ஆணையுடனேயே ஆட்சி மாற்றம் 2020 வரை நல்லாட்சி அரசு தொடரும்

113 0

2020ஆம் ஆண்டு வரை அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என்பதால் இடைக்கால அரசு பற்றிக் கூறப்படும் கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

யாரை அரசாங்கத்தில் அமர்த்துவது என்பது மக்களின் வாக்குரிமையின் ஊடாகவே தீர்மானிக்கப்பட வேண்டும். சூழ்ச்சிகள் மூலமாக அரசாங்கத்தை எவராலும் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் கூறினார். மொனராகலை மல்லகம பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அன்னாசி செய்கை அபிவிருத்தி வலையத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

தற்போது எல்லோரும் இடைக்கால அரசு பற்றிப் பேசுகிறார்கள். அப்படியொன்றைப் பற்றி எமக்குத் தெரியாது. இடைக்காலஅரசு பற்றிப் பேசியவர்கள யார் என்பதும் எமக்குத் தெரியாது. இருப்பினும் இடைக்கால அரசு என்பது அப்பட்டமான பொய். இதைப்பற்றி நாங்கள் பேசியதுமில்லை.

2020 ஆம் ஆண்டுவரை இந்த அரசாங்கமே தொடர்ந்துமிருக்கும். அடுத்தாண்டு ஜனாதிபதி தேர்தலொன்று வரப்போகிறது. தற்போதைய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டில் வரப்போகும் பொதுத் தேர்தல் வரை பதவியிலிருப்பது உறுதி. எனவே நாங்கள் இடைக்கால அரசு என்ற விடயம் முற்றிலும் பொய்யானதென்பதை தெளிவாகக் கூறவிரும்புகிறோம்.

சிலருக்கு பல்வேறுபட்ட எண்ணங்கள் இருக்கலாம். அதைப்பற்றி அவர்கள் கதைப்பதற்கு சுதந்திரமும் இருக்கிறது. என்றாலும் 2020 ஆம் ஆண்டுவரை புதிய அரசொன்றை உருவாக்குவதற்கான தேர்தலொன்று நடைபெறப் போவதில்லை. ஒரு அரசாங்கத்தை பதவியில் அமர்த்துவதற்கு பொதுமக்களின் வாக்குரிமையின் ஊடாகத்தான் செய்யவேண்டுமே தவிர சூழ்ச்சிகளின் மூலமாகவல்ல. எவர்வேண்டுமானாலும் விரும்பினால் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். இந்த அரசுடன் இந்த ஜனாதிபதியுடன் இணைந்து பயணிக்க முடியும். எனினும் இடைக்கால அரசு என்பது ஒருபோதும் நடைபெறமாட்டாது என்றார்.

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு எமது நாட்டில் உருவாக்கப்படுகின்ற அன்னாசி செய்கை அபிவிருத்தி வலையம் நேற்று முன்தினம் மொனராகலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. விவசாய அமைச்சின் விவசாய ஆராய்ச்சி திட்டத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும் அன்னாசி செய்கை வலயம் ஒவ்வொரு அரை ஏக்கர் பரப்பில் 75 பிரிவுகளாக நடப்பட்டுள்ளது. இதில் 75 விவசாயிகள் அன்னாசி செய்கையில் ஈடுபட்டுள்ளனர். விவசாய உபகரணங்கள் உட்பட விவசாய தொழில்நுட்ப அறிவுகளும் இவர்களுக்கு வழங்கப்படும். அதேநேரம் சந்தை வாய்ப்புகளும் அமைச்சினூடாக பெற்றுக்கொடுக்கப்படும்.

எமது நாட்டில் டொலரின் பெறுமதி அதிகரிப்பதுடன் ரூபாவின் மதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனைத் தடுப்பதற்கு முடிந்தவரை ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு செயற்படவேண்டும். ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு உற்பத்தித் துறையை நாட்டுக்குள் மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. இதனைவிடுத்து அரசுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ குறைகூறிக்கொண்டிருப்பதில் எந்தவித பலனுமில்லை என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

இதேவேளை, எமது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டுமானால் வெளிநாட்டு சந்தையை இலக்காகக்கொண்டு உற்பத்திகளை ஆரம்பிக்க வேண்டும். இதனாலேயே நாம் விவசாய அமைச்சு என்ற வகையில் தற்போது ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு விவசாயிகளை ஊக்குவித்து வருகிறோம் என்றார்.

Related Post

ஜப்பானில் உள்ள, இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Posted by - November 13, 2018 0
ஜப்பானில் தொழில் ஈடுபட்டுள்ள உயர்தரத்திலான ஆற்றலை கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தரமாக தங்கியிருக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. ஜப்பான் நாட்டில் மக்களின் எண்ணிக்கை…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய சமைத்த உணவில் முறைக்கேடு.

Posted by - November 11, 2018 0
கிளிநொச்சியில் கடந்த இரு சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமான சில இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியிருந்தது. இதனால் அப் பகுதிகளை சேர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து…

கொழும்புக்குள் நுழைந்த இந்திய நாசகாரி

Posted by - October 12, 2018 0
இந்தியக் கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரிக் கப்பலான ஐஎன்எஸ் ராஜ்புத் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது. இரண்டு நாள் நல்லெண்ணப் பயணமாக வந்துள்ள இந்தியக் கடற்படையின் நாசகாரி…

மஹிந்தவின் பாராளுமன்ற அங்கத்துவப் பிரச்சினை: பாராளுமன்றில் சர்ச்சை

Posted by - December 19, 2018 0
சுதந்திர கட்சியை விட்டும் விலகி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சியுடன் இணைந்த மஹிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி அரசியலமைப்பின் பிரகாரம் இல்லாமல் ஆவதாகவும், இப்படியான ஒருவரை…

கூட்டமைப்பின் ஆதிக்கத்தை அடக்க மைத்திரி போடும் புதுத்திட்டம்!

Posted by - December 15, 2018 0
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக, நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…