இனப்பிரச்சினைத் தீர்விற்கு தமிழ்க் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை: பிரதமர் ரணில்

263 0

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான யோசனைகளுக்கு தமிழ்க் கட்சிகளின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்க தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நல்லாட்சியில் மீண்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றோம். இதில் சகலரும் ஒத்துழைக்கும் நிலையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி தீர்வுக்காண முடியும்.

எமது ஆட்சியில் மீண்டும் தற்பொழுது அரசியலமைப்புத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோம். சகல கட்சிகளின் ஆலோசனைகளுக்கு அமைய நிபுணர்களின் வரைபு யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.

இதன் அடிப்படையில் அனைத்துத் தரப்பினரும் கலந்துரையாடி இணக்கப்பாடொன்றுக்கு நாம் அனைவரும் வருவதே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும்.

மங்கள முனசிங்க தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக் குழு இனப்பிரச்சினைத் தீர்வுகள் குறித்து முன்வைத்த யோசனைகளுக்கு அன்று தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Related Post

அமெரிக்காவுக்கு சவுதி ஆதரவு

Posted by - October 7, 2018 0
கச்சா எண்ணெய் சப்ளை குறைந்துள்ளதால், சர்வதேச சந்தையில் விலை அதிகரித்துள்ளது.இதையடுத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு சவுதி அரேபியா உள்ளிட்ட பெட்ரோல் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை…

இளைஞனை விரட்டிய கும்பல் -பொலிஸாரிடம் வசமாக சிக்கியது

Posted by - October 1, 2018 0
கொக்­கு­வில் ஆடி­ய­பா­தம் வீதி­யில் இளை­ஞனை தாக்­கு­வ­தற்கு 8பேர் கொண்ட கும்­பல் விரட்­டி­யுள்­ளது. தப்­பித்து ஓடிய இளை­ஞன் கிணற்­றுக்­குள் தவறி வீழ்ந்­துள்­ளார். இளை­ஞனை குழு ஒன்று விரட்­டிச் செல்­வ­தைக்…

பாராளுமன்றத்தைக் கலைப்பது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டாலேயே

Posted by - November 8, 2018 0
தேவைப்படுகின்ற போது உரிய காலத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் புதிய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமாக இருப்பதனால்…

கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய மனித தலை!

Posted by - December 13, 2018 0
கொழும்பில் தொழிற்சாலைக்கு அருகில் நபர் ஒருவரின் தலையை பொலிஸார் மீட்டுள்ளனர். பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டு கெமுனு மாவத்தையில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு அருகில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.…

நன்னீர் வளர்ப்பு இறால்களின் விலை வீழ்ச்சி

Posted by - November 7, 2018 0
புத்தளம் மாவட்டத்தில் நன்னீர் வளர்ப்பு இறால்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது இறால் அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், அவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இறால் பண்ணையாளர்கள்…