முதலமைச்சரைக் கைவிட்ட சட்டமா அதிபர்

154 0

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கில், முதலமைச்சருக்கு சார்பாக முன்னிலையாகப் போவதில்லை என்று சட்டமா அதிபர் நேற்று உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பதுளை தமிழ் பெண்கள் மகாவித்தியாலய அதிபர் பவானி ரகுநாத்தை தனது செயலகத்துக்கு அழைத்து, மிரட்டி, முழங்காலில் மண்டியிட்டு மன்னிப்புக் கோர வைத்தார் என்று ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் அதிபர் பவானி அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது.

இதன்போதே, இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில், முதலமைச்சர் சார்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் சட்டவாளர்கள் முன்னிலையாக மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், எதிர்வரும் 25 ஆம் நாள் இந்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

Related Post

திடீரென இந்தியா சென்றார் பிரதமர் ரணில்

Posted by - October 19, 2018 0
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே 3 நாள் பயணமாக நேற்று மாலை திடீரென இந்தியா வந்தார். அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். இந்திய புலனாய்வு நிறுவனமான…

1000 ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாவிட்டால் அரசுடன் பேச தமிழ் முற்போக்கு கூட்டணி தயார்

Posted by - October 15, 2018 0
தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் 1000 ரூபாவை அடிப்படை சம்பளமாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களால் பெற்றுகொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தோடு சம்பள விடயத்தை பேசுவதற்கு தமிழ் முற்போக்கு…

ரணிலை பதவியில் இருந்து விரட்டியது ஏன்? உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மைத்திரி

Posted by - October 27, 2018 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து…

நான் மீண்டும் கட்சியிலிருந்து செல்ல மாட்டேன்- வசந்த சேனாநாயக்க

Posted by - December 3, 2018 0
அத்துரலிய ரத்ன தேரரின் விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடனேயே கலந்துகொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.…

கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய மனித தலை!

Posted by - December 13, 2018 0
கொழும்பில் தொழிற்சாலைக்கு அருகில் நபர் ஒருவரின் தலையை பொலிஸார் மீட்டுள்ளனர். பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டு கெமுனு மாவத்தையில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு அருகில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.…