புதிய தலைமை நீதியரசர் பதவிக்கு நளின் பெரேரா பரிந்துரை

74 0

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக நியமிப்பதற்கு, உச்ச நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேராவின் பெயரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்மொழிந்துள்ளார்.

இன்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடவுள்ள அரசியலமைப்பு சபை இவரது நியமனத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை நீதியரசர் பிரியசாத் டெப்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்தநிலையில், சிறிலங்காவின் 46 ஆவது தலைமை நீதியரசர் இன்று நியமிக்கப்பட வேண்டும்.

இதனை அங்கீகரிப்பதற்கான அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால் இழுபறிகள் காணப்பட்டன.

அரசியலமைப்பு சபைக்கான, உறுப்பினர்களாக, அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, தலதா அத்துகோரள, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமல் ராஜபக்ச, பிமல் ரத்நாயக்க, ஜெயந்த தனபால, ஜாவிட் யூசுப், என்.செல்வக்குமரன் ஆகியோர் மூன்றாண்டு பதவிக்காலத்துக்காக நேற்று நியமிக்கப்பட்டதை அடுத்து, இந்த நெருக்கடி தீர்ந்துள்ளது.

இந்தநிலையில், உச்சநீதிமன்ற நீதியரசரான, நளின் பெரேராவின் பெயரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பு சபைக்கு நேற்று முன்மொழிந்துள்ளார்.

இவர், 10 பேர் கொண்ட உச்சநீதிமன்ற நீதியரசர்களில், மூப்பு வரிசையில், ஆறாம் இடத்தில் இருக்கிறார்.

2016ஆம் ஆண்டு இவரை உச்சநீதிமன்ற நீதியரசராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே நியமித்திருந்தார்.

மூன்று பத்தாண்டுகளுக்குப் பின்னர், தலைமை நீதியரசராக, பொறுப்பேற்கும் முதலாவது தொழில்சார் நீதியரசராக இவரே இருப்பார்.

நீதிவானாக பணியை ஆரம்பித்து, தலைமை நீதியரசராக உயர்பதவிக்கு கடைசியாக நியமிக்கப்பட்டவர், நீதியரசர் பரிந்த ரணசிங்க ஆவார்.

அதற்குப் பின்னர், நளின் பெரேராவே, நீதிவானாக பணியை ஆரம்பித்து, தலைமை நீதியரசராக பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடவுள்ள, சிறிலங்கா பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனைய 7 புதிய உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபை புதிய தலைமை நீதியரசரின் நியமனத்துக்கு அங்கீகாரம் அளிக்கும்.

Related Post

காதல் விவகாரம்! க.பொ.த சாதரண தரப் பரீட்சை மண்டபத்திற்குள் கத்தி குத்து?

Posted by - December 13, 2018 0
பரீட்சை மண்டபத்துக்குள் முக மூடியணிந்தவாறு புகுந்த இளைஞர்கள் இருவர், பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவியைக் கத்தியால் குத்த முற்பட்டுள்ளனர். இந்த பரபரப்புச் சம்பவம் மொனராகலை நக்கல ராஜயானந்த…

வெலிக்கந்தயில் ரயிலில் மோதியதில் யானை காயம்

Posted by - October 10, 2018 0
வெலிக்கந்த – மொனரதென்ன பகுதியில் நேற்றிரவு, ரயிலில் மோதி யானையொன்று காயமடைந்துள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த நகரங்களுக்கிடையிலான ரயிலில் மோதி குறித்த யானை…

நாலக்க சில்வா இன்று மூன்றாவது நாளாகவும் CID யினால் விசாரணை

Posted by - October 22, 2018 0
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா இன்று (22) மூன்றாவது நாளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கொலை சதித் திட்ட குற்றச்சாட்டு…

உழுந்து, நிலக்கடலை இறக்குமதியை நிறுத்த தீர்மானம்

Posted by - October 21, 2018 0
உழுந்து மற்றும் நிலக்கடலை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரம், சோளம் மற்றும் பயறு உள்ளிட்ட பல தானியங்களுக்கான வரி அடுத்த வருடத்திருந்து இரு…

2021க்கு பின் ஏஞ்சலா மேர்கெல் போட்டியில்லை

Posted by - October 30, 2018 0
ஐரோப்பிய நாடான, ஜெர்மனியின் அதிபராக பதவி வகிப்பவர், ஏஞ்சலா மேர்கெல், 64; கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியைச் சேர்ந்தவர். இவரது பதவிக்காலம், 2021ல் முடிவடைகிறது. அதன்பின், அவர்…