சிறுமிகளுக்கு துன்புறுத்தல்: வட்டுக்கோட்டை ஆசிரியருக்கு 3 மாதங்களின் பின் பிணை!

94 0

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக 3 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நிபந்தனையுடனான பிணையில் விடுவித்தது.

சந்தேகநபர் கடந்த வியாழக்கிழமை மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

“ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மேலும் சில சிறுமிகளின் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன. அந்தச் சிறுமிகளிடம் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வாக்குமூலத்தைப் பெறும் வரை ஆசிரியருக்குப் பிணை வழங்கப்படக் கூடாது” என்று பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எஸ்.சோபிதன் கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

“சந்தேகநபருக்கு எதிரான சாட்சிகளான இரண்டு சிறுமிகளின் முழுமையான வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன. அவரைப் பிணையில் விடுவிப்பதற்கு ஆட்சேபனையில்லை” என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் மன்றுரைத்தனர்.

அத்துடன், சிறுவர் பாதுகாப்பு அதிகாரியும் பிணை வழங்குவதற்கு ஆட்சேபனையில்லை என்று மன்றுரைத்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பான சட்டத்தரணியின் ஆட்சேபனை மற்றும் வழக்குத் தொடுனரான பொலிஸாரின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த மன்று, சந்தேகநபரை நிபந்தனையுடனான பிணையில் விடுவித்துக் கட்டளை வழங்கியது.

தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணை மற்றும் 50 ஆயிரம் ரூபா காசுப் பிணையில் சந்தேகநபரை விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னணி

வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் சிலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுகின்றார் என சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டன.

அவர் தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் கடந்த ஜூன் 13ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

Related Post

சிங்கள அரசியலிலும் ஒரு வடிவேல் சுரேஷ் தோற்றம்

Posted by - November 21, 2018 0
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பொறுப்பில் இருந்து பதவி விலகுவதாக அறிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க இன்று (புதன்கிழமை) நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில்…

ரணிலை ஆதரிக்கும் கூட்டமைப்பின் தீமானத்தால் தமிழ் மக்களுக்கு நன்மை இல்லை – செ.கஜேந்திரன்

Posted by - December 14, 2018 0
ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்…

இலங்கையில் தொடரும் பொம்மலாட்டம்

Posted by - October 29, 2018 0
இலங்கையில், அதிபர் மைத்ரிபால சிறிசேனவால், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் பதவியில் இருப்பதை அங்கீகரிப்பதாக, பார்லிமென்ட் சபாநாயகர், கரு ஜெயசூர்யா கூறியுள்ளார். மேலும்,…

நாமல் உயன பூங்காவின் முன்னேற்றத்தில் ஊடகங்களுக்கும் பங்குண்டு

Posted by - October 15, 2018 0
அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஊடகங்களை விமர்சிப்பதை விடுத்து ஊடகங்கள் மூலம் நாட்டுக்கு இடம்பெறும் நல்லவைகள் தொடர்பிலும் நாம் பாராட்டவேண்டியது அவசியம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாமல்…

இளைஞனை விரட்டிய கும்பல் -பொலிஸாரிடம் வசமாக சிக்கியது

Posted by - October 1, 2018 0
கொக்­கு­வில் ஆடி­ய­பா­தம் வீதி­யில் இளை­ஞனை தாக்­கு­வ­தற்கு 8பேர் கொண்ட கும்­பல் விரட்­டி­யுள்­ளது. தப்­பித்து ஓடிய இளை­ஞன் கிணற்­றுக்­குள் தவறி வீழ்ந்­துள்­ளார். இளை­ஞனை குழு ஒன்று விரட்­டிச் செல்­வ­தைக்…